சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். உடன் இருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவலர் மகாலிங்கம் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மகாலிங்கம் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி எழுதிவைத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
