காசாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருவதால் உணவில்லாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ எட்டியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையால், அங்கு கடுமையான பஞ்சம் நிலவுகிறது. காசா மக்களுக்காக தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் வழங்கி வந்த நிலையில், இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் உயிரிழந்து வருகின்றனர். உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
காசாவில் உணவு, மருத்துவம் இன்றி மக்கள் தவித்து வருவதாக கவலை தெரிவித்த ஐ.நா அங்கு தீவிர பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காசாவில் உணவின்றி பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டால் குழந்தைகள் உள்பட இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் இறந்துள்ளதாகவும், இதுவரை குழந்தைகள் மட்டும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டால் 117 பேர் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.