தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வாழ்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு காசாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலியான ஏராளமான உடல்கள் நகரின் நாசர் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கான் யூனிஸில் உள்ள அசோசியேட் பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் பலரின் உடல்கள் துண்டுதுண்டுகளாக சிதையுண்டதாகவும், சிலரின் உடல்கள் பைகளில் அடைத்து கொண்டுவரப்பட்டிருந்ததாகவும், மொத்தம் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
வடக்கு மற்றும் தெற்கு காசாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 24 குழந்தைகள் உள்பட மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டனர்.