இஸ்ரேல் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சனை குறித்து செய்தி சேரிக்க சென்ற அல்ஜசீரா பெண் செய்தியாளர் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து அல்ஜசீரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷரீன் அபு செய்தி சேகரிக்கச் சென்றார். செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஷீரின் அபுவை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொலை செய்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் ஷீரின் அபுவின் மரணத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து, அல்-ஜசீரா பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஷிரீன் அபுவின் மறைவுக்குப் பல தரப்பினரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
``ஷிரீன் அபு பத்திரிகையாளர் உடை மற்றும் ஹெல்மெட் ஆகியவை அணிந்திருந்தபோதும், இஸ்ரேலியப் படைகள் அவரை முகத்தில் சுட்டுக் கொன்றனர்" என கத்தாரின் உதவி வெளியுறவு அமைச்சர் லோல்வா அல் காதர் தெரிவித்திருக்கிறார்.