world

திருச்சி விரைவு செய்திகள்

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்  மனுக் கொடுத்து பெருந்திரள் முறையீடு

பாபநாசம், நவ.11-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை கிராமம், சேர்மாநல்லூர் ஆதி திராவிடர் சமூகத்தைச் 30 குடும்பங்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன், அரசு பட்டா வழங்கி, அதில் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள்.  அவர்கள் குடியிருக்கும் இடம், வருவாய் பதிவேட்டில் நிலுவை இடம் என உள்ளது. அரசு வீடு கட்டும் திட்டத்தில், வீடு மற்றும் இதர அரசு உதவிகள் ஏதும் பெற இயலாத நிலை உள்ளது. நிலம், மனை ஏதுமற்ற அவர்களுக்கு, அவர்கள் குடியிருப்புகளுக்கு வகை மாற்றம் செய்து, அரசு பட்டா வழங்க வலியுறுத்தி, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன், மனுக் கொடுத்து பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேர்மாநல்லூர் சிபிஎம் கிளைச் செயலாளர் அய்யாசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், ஒன்றியச் செயலாளர் இரவி உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்:  மயிலாடுதுறையில் சிறப்பு பேரவை

மயிலாடுதுறை, நவ.11-  மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் கோ. பாரதிமோகன் நினைவகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஐ.ஆர்-யை விளக்க பேரவைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளர்  பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், டி.சிம்சன், ஜி. வெண்ணிலா, கே.பி. மார்க்ஸ், டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ, ஒன்றியச் செயலாளர்கள் அசோகன், கேசவன்,  ஏ.ஆர். விஜய், முரளி மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பேரவையில் கலந்துக்கொண்டனர்.