அதிருப்தியை திசை திருப்பும் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு திடீரென நலத் திட்டம் அறிவிப்பு
நியூயார்க், நவ. 10 - அமெரிக்கக் குடிமக்களில் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் ( 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ) வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். பல நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து இந்த பணத்தை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க மக்களிடையே அதிக அதிருப்தி எழுந்துள்ள நிலையில் அதனை மடைமாற்ற இவ்வாறு திடீரென நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
