world

img

எப்ஸ்டீன் பைல்ஸ் : பிரிட்டன் பிரதமருக்கு அதிகரிக்கும் நெருக்கடி

எப்ஸ்டீன் பைல்ஸ் : பிரிட்டன் பிரதமருக்கு அதிகரிக்கும் நெருக்கடி

லண்டன், பிப்.11-  கொடூரமான பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியான பிறகு பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.  டிரம்ப், எலான் மஸ்க், பில்கேட்ஸ், இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ  உள்ளிட்ட பலரும் எப்ஸ்டீன் குழந்தைகளை கடத்தி பாலியல் வன் கொடுமைகள்  (பாலியல் சுரண்டல், வணிகம்) நடத்தி வந்த தீவுக்கு சென்று வந்ததாகவும் அவருடன் தொடர்பில்  இருந்த தாகவும் அந்த ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது.   இந்த ஆவணத்தின் காரணமாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் தான் மிகப்பெரிய அரசியல் நெருக்க டியை சந்தித்துள்ளது.  இளவரசர் ஆண்ட்ரூவை தவிர்த்து பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நம்பிக்கைக்குரிய நபராகவும் , ‘நியூ லேபர்’ (New Labour) கட்சியின் முக்கிய புள்ளியாகவும் இருந்த  பீட்டர் மண்டெல்சனும் இந்த எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபராக உள்ளார். அதாவது எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளி என்பதை உலகம் அறிந்த பின்னரும் மண்டெல்சன் எப்ஸ்டீனை தனது “சிறந்த நண்பர்” என்று அழைக்கும் அளவிற்கு அவருடன் நெருக்க மாக இருந்துள்ளார்.  இந்த பீட்டர் மண்டெல்சனை அமெரிக்காவிற்கான பிரிட்டன் தூதராக பிரதமர் ஸ்டார்மர் நியமித்தார். அந்தத் தேர்வைக் குறித்து “மகிழ்ச்சி” அடைவதாகக் கூறிய ஸ்டார்மர், “பீட்டர் இந்தத் துறைக்கு ஈடு இணையற்ற அனுபவத்தைக் கொண்டு வருவார், நமது நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவார்” எனப் புகழாரம் வேறு சூட்டி இருந்தார். மண்டெல்சன் மீது ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைய உள்ளன. அவரது மிக மோசமான ரகசிய நடவ டிக்கைகளின் காரணமாக அவருக்கு “இருளின் இளவரசன்”  என்ற பெயரையும் அந்நாட்டு அரசியல் வட்டாரம் சூட்டி யுள்ளது. மேலும் அவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்பு 2019-லேயே பகிரங்கமாக அம்பலப்பட்ட பிறகும் அவரை ஸ்டார்மர் பயன்படுத்தி இருப்பது பெரும் விவா தத்திற்குள்ளாகியுள்ளது.  இதன் பிறகு வேறு வழியின்றி மண்டெல்சனை அந்தப் பதவியிலிருந்து ஸ்டார்மர்  நீக்கினார். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழம் பற்றித் தமக்குத் தெரியாது என்று தனக்கு ஆபத்து வராமல் அப்போது தப்பித்துக்கொண்டார்.     இத்தகைய சூழலில் தான் 2026 ஜனவரி மாதம் வெளி யான எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் பல அதிர்ச்சி யூட்டும் தகவல்களை வெளியிட்டன. அதில் மண்டெல்சன்  மூத்த அமைச்சராக இருந்தபோது, பிரிட்டன் அரசாங்கத்தின் ரகசியக் கொள்கைகளை எப்ஸ்டீனுக்குக் கசியவிட்டுள்ளார். எப்ஸ்டீனின் சார்பாக  வங்கி அதிகாரிகளின் போனஸ் மீதான வரி விதிப்பை ரத்து செய்யுமாறு அப்போதைய நிதியமைச்ச ரிடம் மண்டெல்சன் லாபி செய்ததுடன்  அழுத்தம் கொடுத் துள்ளார்.  இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், எப்ஸ்டீன் குழந்தைகளை கடத்தி அவர்களை வன்கொ டுமை செய்த குற்றங்கள் எதைப் பற்றியும் மண்டெல்சன் துளி  அளவுக்கூட கவலைப்படவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதார ணம் என்னவெனில் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு 2009 இல் சிறையிலிருந்து விடுதலை யான நாளை “விடுதலைத் திருநாள்” (liberation day) என்று மண்டெல்சன் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் அரசியலில் ஏற்கெனவே ஆதரவு தளத்தை இழந்து வரும் ஸ்டார்மருக்கு இந்தச் சூழல் புதிய நெருக்க டியை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியை சமாளித்து தனது பதவியை பாதுகாத்துக்கொள்ள மண்டெல்சனை கட்சி யிலிருந்தும் பிரபுக்கள் அவையிலிருந்தும் நீக்கியுள்ளார்.  ஸ்டார்மரும்  மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் மண்டெல்சன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாகவும், எப்ஸ்டீனுடனான அவரது உறவு தங்களுக்குச் சொல்லப்பட்டதை விட முற்றிலும் மாறுபட்டது என்றும் தன்னை காப்பாற்றிக்கொள்ள வாதிட்டு வருகிறார். இப்படிப்பட்ட மோசமான வரலாற்றுப் பின்னணி யைக் கொண்ட ஒருவரைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் கூறுவது நம்பும்படியாக இல்லை என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.