world

img

லிபியாவில் அடிமைகளாக சிக்கித் தவிக்கும் இந்திய தொழிலாளர்கள்

திரிபோலி,டிச.21- லிபியாவில் வேலைதேடிச் சென்ற 16 இந்தியர்கள்  அடிமைகளாக சிக்கி தவித்து வருகின்றனர். தங்கள் சிறைக் கைதிகளை போல நடத்தப்படுவதா கவும் விரைவாக தங்களை மீட்க வேண்டும் எனவும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். லிபிய நாட்டைச் சேர்ந்த துபாயை தளமாகக் கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர்  உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வர்களை வேலைக்காக லிபியா அழைத்துச் சென்றுள்ளார். லிபியா வில் உள்ள பெங்காஸி என்ற சிமெண்ட் ஆலையில் அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

விசா, விமான டிக்கெட் முதலிய வற்றுக்கு பணம் செலுத்தி தொழி லாளர்களை அழைத்துச் சென்ற அந்த ஒப்பந்ததாரர், அங்குச் சென்றதும், தொழிலாளர்களுடைய போன், பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமை களை பறித்துவைத்துக்கொண்டார். சட்டப்பூர்வ அடையாள ஆவணங் கள் உங்களிடம் இல்லாததால் நீங்கள் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவீர்கள். மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள் என மிரட்டியும் அடித்தும் அவர்களை தொழிற்சாலையில் வேலை வாங்கி யுள்ளனர்.

இவ்வாறு அந்த சிமெண்ட் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்த 16 இந்திய தொழிலாளர்கள் தற்போது சிக்கித் தவித்து வருகின்றனர். அதிக வேலை நேரம், குறைந்த  ஊதியம்,  சுகாதாரமற்ற தங்குமிடம் என  தொழி லாளர்கள்  கடந்த நான்கு மாதங்களு க்கு மேலாக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர். குற்றவாளிகளை போல நடத்தப்பட்டுள்ளனர். தற்போது தங்களை மீட்டு இந்தி யாவுக்கு அழைத்துச்செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தொழிலாளர்கள் ஒன்றிய அர சிடம் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இந்த கொடுமை தொடர்பான தகவல் கடந்த நவம்பர் மாதம் லிபி யாவில் வெளியேவந்துள்ளது. இத னையடுத்து  உள்ளூர் அமைப்பு ஒன்று  லிபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. இந்தியாவில் நிலவும் தீவிரமான வேலையின்மையை பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பல நிறுவனங்கள்  வெளி நாடுகளுக்கு அனுப்பிவைத்து பணம் பறிப்பதை தொழிலாகக் கொண்டுள் ளனர். இதனால் நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்கள் பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர்.