பெர்லின்,டிச.21- ஜெர்மனியில் உள்ள தீவிர வலது சாரிக் கட்சியான ‘ஜெர்மனிக்கு மாற்று’ (AfD) என்ற கட்சியை எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து பேசி யுள்ளார். எலான் மஸ்க் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர/அதி தீவிர வலதுசாரிகளை ஆதரித்து வருகிறார். ‘ஜெர்மனிக்கு மாற்று’ (AfD) கட்சி யால் மட்டுமே ஜெர்மனியை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SDP), பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஆகிய வற்றின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணி உடைந்தது. இதன் பிறகு ஜெர்மனி நாடாளுமன்றத் தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப் பில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலை மையிலான அரசு தோல்வியடைந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல், வளர்ச்சிக்கான பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நவதாராளமய பொருளாதா ரக்கொள்கையை அமல்படுத்திய தாலும், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து ஜெர்மன் மக்களின் வரிப் பணத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கியது என மக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவ டிக்கைகளில் மட்டுமே இக்கூட்டணி அரசு ஈடுபட்டு வந்தது.
இதனால் மக்களுக்கு அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கட்சி மீதான கடுமையான அதிருப்தி உள்ளது. 2025 பிப்ரவரி 23 அன்று அந்நாட்டில் பொதுத்தேர்தலிலும் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஜெர்மனின் பழமைவாதக் கட்சிக்கு தான் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜெர்மனிக்கு மாற்று என்ற தீவிர வலதுசாரிக்கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘ஜெர்மனிக்கு மாற்று’ கட்சியை எலான் மஸ்க் ஆதரித்த போதிலும் அக்கட்சியில் சில தலைவர்களுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே முரண் பாடுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் கொள்கைகளை நான் படித்தேன், அதில் எதுவுமே தீவிர வாதமாகத் (Extrimist) தெரிய வில்லை.
ஒருவேளை நான் எதை யாவது தவறவிட்டிருக்கலாம் என அக்கட்சியினரை நக்கல் செய்யும் வகை யில் எலான் மஸ்க் பேசியிருந்தார். இக்கட்சியும் பிராண்டன்பர்க் மாநி லத்தில் அமையவுள்ள டெஸ்லாவின் மின்னணு சாதன தொழிற்சாலையை எதிர்க்கிறது. இந்நிலையில் தான் இந்த ஆதரவு கருத்துக்களை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜெர்மனி மட்டுமின்றி இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இங்கிலாந்து சீர்திருத்தக் கட்சித் தலை வர் நைகல் ஃபாரேஜ் உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள வலது சாரி அரசியல்வாதிகளை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இங்கி லாந்து வலதுசாரிக்கட்சி தலைவரான நைகல் ஃபாரேஜ் தனக்கு எலான் மஸ்க் ஆதரவு தருவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.