world

img

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் ஹஷீம் ஷஃதீன்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹஷீம் ஷஃதீன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக ஹஷீம் ஷஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹஷீம் ஷஃபிதீன் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் உறவினர் ஆவார்.

முன்னதாக லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹஷீம் ஷஃபிதீனும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியானது.

கடந்த 2017-இல் அமெரிக்கா ஷஃபிதீனை பயங்கரவாதியாக அறிவித்தது. ஷஃபிதீன் ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை கவனிப்பவராகவும், அக்குழுவின் ஜிஹாத் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

ஷஃபிதீன் சிரிய நாட்டை ஆதரித்ததற்காக, சவுதி அரேபியாவின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது கொடூரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.