ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி(64) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் லிபரெல் ஜனநாயகக் கட்சி சேர்ந்த மற்றொரு நிர்வாகியான சனே டகைச்சி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மொத்தம் 465 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 237 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சனே டகைச்சி ஜப்பானில் 104ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இதன்மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி அறியப்படுகிறார்.