world

img

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தல்

டோக்கியோ, நவ.3- ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சுமார் 15 விழுக் காடு வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளன.

கடந்த தேர்தலுக்குப் பிறகு ஃபுமியோ கிஷிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அந்த அரசின் அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகளால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. அதோடு, கட்சிக்கு நிதி திரட்டியதில் ஏராள மான முறைகேடுகள் செய்ததாகவும் பிரதமர் கிஷிதா  மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் காரணம் காட்டி, அவரைப் பதவியில் இருந்து வெளி யேற்றிய கட்சி, புதிய தலைவராக ஷெகுரு இஷிபா வைத் தேர்வு செய்தது. அவர் பிரதமராகப் பொறுப் பேற்றதோடு, ஒரே மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுப் புதிய தேர்தலை நடத்த முடிவு செய்தார்.

தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கும், அதன் கூட்டணிக்கட்சியான கொமெய்டோவுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளன. மேலும் சில  கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி யமைக்கும் முயற்சியில் உள்ளனர். 

இடதுசாரிகளோடு  கைகோர்த்த எதிர்க்கட்சி

பிரதான எதிர்க்கட்சியான ஜப்பான் அரசியல் சட்ட ஜனநாயகக் கட்சிக்கு 148 இடங்கள் கிடைத்துள் ளன. கடந்த முறை 96 இடங்களை மட்டுமே இக்கட்சி பெற்றிருந்தது. இந்தக் கட்சி அரசின் அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. குறைந்தபட்ச ஊதியம், விரிவடைந்த நலக் கொள்கைகள், பாலின சமத்துவம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அதிகாரப்பரவல், அமெரிக்க-ஜப்பான் ராணுவ ஒப்பந்தத்தை மாற்றுதல் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் இடதுசாரிகளோடு கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.

இடதுசாரிகள் முன்னேற்றம்

இத்தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சிகளான ரெய்வா மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. விகிதாச்சார பிரதிநித்துவ வாக்களிப்பில் ரெய்வா 6.98%, ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி 6.16% மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி 1.71% வாக்குகளைப் பெற்றுள்ளன. தொகுதி வாரியான வாக்களிப்பில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6.81% வாக்குகள் கிடைத்துள்ளது. 

மூன்று கட்சிகளும் இணைந்து 17 இடங்களில் (ரெய்வா 9, ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி 8 மற்றும்  சமூக ஜனநாயகக் கட்சி 1) வெற்றி பெற்றி ருக்கின்றன. தலைநகர் டோக்கியோ பகுதியிலும் ரெய்வா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து 15 விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளன.