ஒட்டாவா, நவ. 4 - கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து மதக் கோயிலில் இருந்த இந்திய பக்தர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர் கள் தாக்குதல் நடத்திய நிலையில் அச்சம்பவத்து க்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித் துள்ளார்.
“இந்த வன்முறை ஏற்கத்தக்கதல்ல. கனடா வில் வாழும் ஒவ்வொரு நப ருக்கும் அவர்கள் விரும்பு கிற மதத்தைச் சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்ற உரிமை இருக்கிறது” என்று பிரதமர் ட்ரூடோ ‘எக்ஸ்’ சமூகவலைதள கணக்கில் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் அமைப்பின் கொடிகளை ஏந்தி யிருந்ததாகவும் தாக்குத லுக்கு முன்னதாக அவர்கள் 1984 சீக்கிய கலவரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியின் காவல்துறை அதிகாரியான நிஷான் துரையப்பா கூறுகையில்,
“இந்த தாக்குதல் சம்ப வத்தால் பதற்றம் ஏற்பட்டுள் ளது.
இதனால் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். வன்முறைத் தாக்கு தலில் ஈடுபட்டவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார்கள்” என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்
இந்நிலையில் கனடாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்து சபா கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியிருக்கும் அவர், “இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கனடா அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிராம்டன் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தைத் தடுப்பதற்கு கனடா அரசு முன்னேற்பாடாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.