world

img

காஸாவை வந்தடைந்தன முதல் நிவாரணப் பொருட்கள்

காஸா, ஜன. 19 - பதினைந்து மாத கால இஸ்ரேலின் - கொடிய தாக்கு தலுக்குப் பிறகு இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) காலை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், காஸாவில் கடுமையான அழிவுகளை சந்தித்த மக்க ளுக்கு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது.  உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு அம லாக இருந்த போர் நிறுத்தம், ஹமாஸ் இயக்கம் விடுவிக்க இருக்கும் கைதிகளின் பட்டி யலை வழங்காததால் சுமார்  மூன்று மணி நேரம் தாமத மானது. இறுதியாக காலை 11:15 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த காலதாமதத்தின்போது கூட  காஸாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பாலஸ்தீனியர்கள் உயி ரிழந்ததாக காஸா குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரி வித்துள்ளது. போர் நிறுத்தம் அமலான சில நிமிடங்களிலேயே, காஸாவுக்கு முதல் மனிதாபி மான உதவிப் பொருட்கள் வந்தடைந்தன. 197 நிவாரணப் பொருட்கள் நிரம்பிய லாரிகளும், 5 எரி பொருள் லாரிகளும் கெரெம் ஷாலோம், அல்-ஓகா மற்றும் நிட்சானா எல்லைப் பகுதிகள் வழியாக காஸாவை சென்றடைந்துள்ளன என எகிப்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக, முதல் கட்டமாக மூன்று இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்களில் ஒருவர் ருமேனிய குடியுரிமையும், மற்றொருவர் பிரிட்டிஷ் குடி யுரிமையும் கொண்டவர்கள் என கத்தார் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மஜெட் அல்-அன்சாரி தெரி வித்தார். பதிலுக்கு இஸ்ரேல் 90 பாலஸ்தீனிய கைதி களை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.  இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ் ரேலின் இனவெறி பிடித்த பாதுகாப்பு அமைச்சர் இட்ட மார் பென்-க்விர் மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இருப்பினும், அவர்கள் நேதன்யாகு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கமாட்  டோம் என தெரிவித்துள்ளனர்.  காஸா மக்கள் போர் நிறுத்தத்தை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்ட னர். பல குடும்பங்கள் தங் களது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். எனி னும், கிழக்கு எல்லைப் பகுதி களில் தொடர்ந்து பீரங்கி சத்தங்கள் கேட்டதாக உள் ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்க இஸ்ரே லுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் நேதன் யாகு மிரட்டியுள்ளார். காஸா வில் ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் வரை மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை தொடரும் என இஸ்ரேல்  மிரட்டியுள்ளது.