- எழில் - சேலம், ஜன.19- சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவமனை வளாகத்திலுள்ள காத்திருப்போர் அறை, ஆதரவற்ற வர்களின் இருப்பிடமாக மாறி வரு கிறது. மேலும், அங்கேயே அவர்கள் இறக்கும் அவலமும் அரங்கேறி வரு கிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு ஆகியவற்றில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோ றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சேலம் மட்டு மின்றி தருமபுரி, நாமக்கல், கள்ளக் குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல் வேறு மாவட்ட மக்களின் சிகிச்சைக் கான தலைமை மருத்துவமனையாக சேலம் அரசு மருத்துவமனை உள் ளது. இந்த மருத்துவமனையில் அரசு சார்பில் உயர் ரக மற்றும் வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட மருத்துவ கருவிகள், உபகரணங் கள் மற்றும் மருந்து வசதிகள் தாராள மாக கிடைப்பதால், சிகிச்சைக்காக வரும் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்காக தினந்தோறும் உற வினர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள் ளனர். மேலும், நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள காத்திருப்போர் அறைகளில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை உள் ளது. இதற்காக அரசு சார்பில் உயர் ரக கழிப்பிடம், மின்விசிறி ஆகிய வசதி களுடன் கூடிய காத்திருப்போர் அறை யும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த காத்திருப் போர் அறை முறையாக பராமரிக்கப் படாதாலும், மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர்கள் அதனை கண்டு கொள்ளாதாலும், தற்போது அந்த அறை ஆதரவற்றவர்களின் இருப்பிட மாக மாறி வருகிறது. வீட்டில் வயதான முதியோர்களை இறுதி காலத்தில் பரா மரிக்க முடியாதவர்கள், அவர்களை தூக்கி வந்து இந்த காத்திருப்போர் அறையில் விட்டு செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும், சேலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள் இந்த காத்திருப்பு அறையை பயன் படுத்தி வருகின்றனர். இதனால் காத் திருப்போர் அறையில் நாள் கணக்கில் உண்ண உணவின்றி, தண்ணீரின்றி தினம் தினம் பாதிக்கப்பட்டு, கடைசி யில் உயிரிழக்க வேண்டிய பரிதாப மும் ஏற்பட்டுள்ளது. எப்போதும் காத்தி ருப்போர் அறையில் ஆதரவற்றவர் கள் நோயாளிகள் போல் படுத்து கிடப் பதால், ஊழியர்களும், அப்பகுதியில் செல்லும் பொதுமக்களும், வயதா னவர்கள் என்று கடந்து விட்டு செல் கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இறந்து பல நாட்கள் ஆகியும் துர் நாற்றம் வீசும்போது தான் ஊழியர்கள் அதனை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. காவல் துறையும் அவ்வப்போது இதுகுறித்து மருத்துவமனை நிர்வா கத்திற்கு அறிவுறுத்தி வருகிறது இருப் பினும் இது தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் மூன்று பேர் இது போன்று ஆதரவற்ற நிலையில் பரி தாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என் பது கடைசி வரை தெரியாமல், இறுதி யில் காவல் துறையினரே அவர்களை அடக்கம் செய்தனர். அரசு மருத்துவம னையை பொறுத்த வரையில் வாரத் தில் இரண்டு நாட்கள் உயர் அதிகாரி கள் ஒவ்வொரு வார்டிலும் என்னென்ன தேவைகள் என்பது குறித்தும், சுற்றுப் புற சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய் வது வழக்கம். ஆனால், தற்போது அந்த ஆய்வும் நடக்கிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள, குறிப் பாக ஒப்பந்தப் பணியாளர்களை மேற் பார்வை செய்ய அறிவுறுத்துவதால், அவர்கள் தரும் அரைகுறை அறிக்கை யின் அடிப்படையிலேயே ஆய்வு செய் யப்பட்டதாக கணக்கு காட்டப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத னால் மருத்துவமனை நிர்வாகம் நாளுக்கு நாள் செயலிழந்து வருகிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினந்தோறும் வந்து செல்லும் இந்த இடங்கள் தற்போது துர்நாற்றம் வீசக் கூடிய இடங்களாக மாறியுள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வா கம் உடனடியாக இதுபோன்ற செய லில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக் காக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு மக்களின் நலனுக்காக காத்திருப்போர் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசு செய்து கொடுத்தாலும், அதனை முறையாக பேணிக் காக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.