தருமபுரி, ஜன.19- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகு தியில் குடியிருப்பு அருகே எரிக் கப்படும் குப்பைகளால் எழும் புகை யால், பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தருமபுரி நகராட்சி, 8 ஆவது வார்க் டுக்குட்பட்ட ஹரிசந்திரா பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பு அருகே ராமக்கள் ஏரியின் கரைப் பகுதி உள்ளது. இக்கரைப் பகுதியில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தை கடந்து அங்கு நக ராட்சியின் குப்பைகள் கொட்டப்படு கிறது. அங்கு தருமபுரி நகராட்சியின் சார்பில், தூய்மை இந்தியா இயக் கத்தின் மூலம் ரூ.61 லட்சம் மதிப் பீட்டில் குப்பையை பிரித்து நுண் உர செயலாக்கம் மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மையம் செயல்பாட்டில் இல்லை. இதனால் தினந்தோறும் நகராட்சியின் குப்பை கள் கொட்டப்படுவதால், மலை போல் குவியத் தொடங்கியவுடன் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், தீயின் புகை வேகமாக பரவி ஹரிசந்திரா பகுதி குடியிருப்பு களுக்கு பனிபடர்ந்தால் போல் செல் கிறது. இதனால் பெரியவர் முதல் முதல் குழந்தைகள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப் படுகின்றனர். மேலும், தீ புகையினால் அப்பகுதியின் வீட்டின் சுவர் பாதிக் கப்படைகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள மயானத்தை ஆக்கிரமித்து நகராட்சி குப்பை கொட்டப்படுவதால், இறந்த வர்களின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தார் வழிபட நினைவிடத்தை தேட வேண்டியுள்ளது. மேலும், அதே பகுதியில் குப்பை கொட்டப் படுவதால் ராமக்கள் ஏரியின் நீர்நிலை மாசடைகிறது. மேலும், ஏரியின் அருகே மயானம் இருப்பதால் அதிக மழை பொழிவு உள்ளபோது ஏரி நிரம்பி மயானத்திற்குள் தண்ணீர் நிற்கிறது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் சிரமம் உள் ளது. எனவே, ஏரியின் கரையை பலப் படுத்த வேண்டும். ஏரி மற்றும் மயா னத்தில் குப்பைகளை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியு றுத்தியுள்ளனர்.