districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

லாரியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

உதகை, ஜன.19- கூடலூரில் கனரக சரக்கு லாரியில் சிக்கி தந்தை,  மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரப் பகுதியில் இருந்து மைசூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இந் நிலையில், ஞாயிறன்று வழக்கம் போல் கூடலூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கூடலூர் மனதுர்கா பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மற்றும் அவரது மகன் விகில் வர்ஷன் (7), இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறிய தந்தை, மகன் கீழே விழுந்தனர். அப் போது சரக்கு லாரி அவர்கள் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இவ்விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த தந்தை, மகனின் உடல்கள் கூடலூர் அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாள்தோறும் கூட லூர் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாக னங்களால் இடையூறு ஏற்படுவதோடு, இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

ராசிபுரம்: ஜன.22இல் மின்தடை

நாமக்கல், ஜன.19- ராசிபுரம் பகுதியில் ஜன.22 ஆம் தேதியன்று  மின்விநியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை மின் நிலை யத்தில் ஜன.22 ஆம் தேதியன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராசிபுரம்,  முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளை யம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண் டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளை யம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிரா நல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஜன.22 ஆம்  தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை  மின் விநியோகம் இருக்காது, என ராசிபுரம் மின்வா ரிய செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன் தெரிவித் துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் மீதான வழக்கு குறித்து காவல் உதவி ஆணையர் விசாரணை

சேலம், ஜன.19- சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு குறித்து, புகாரளித்தவர்களிடம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் சனியன்று விசாரணை மேற்கொண்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகன்நாதன். இவர் மீது பல்கலைக்கழக நிர்வாகிகளை இயக்குநராக கொண்ட பூட்டர் பவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக புகார் எழுந்தது. இதற்கிடையே, பல்கலைக்கழகத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதாகவும், இந்த அமைப்பு பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டி, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக சூரமங்கலம் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். இந்நிலையில், இளங்கோவனை சாதியைச் சொல்லி திட்டியதாக கொடுத்த புகாரின்பேரில், ஜெகன்நாதனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடனடியாக ஜாமீனும் கிடைத்தது. தொடர்ந்து, அவர் மீதான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், அவர் மீதான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியதையடுத்து, சூரமங்கலம் உதவி ஆணையர் ரமலீ ராமலட்சுமி, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக புகாரளித்தவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.  அதன் பேரில், தொழிற்சங்க பொதுச் செயலாளர் சக்திவேல், தொழிற்சங்க அமைப்புச் செயலாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் சூரமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு சனியன்று ஆஜராகினர். இவர்களிடம் துணைவேந்தர் மீதான வழக்கு குறித்து காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, துணைவேந்தர் ஜெகன்நாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய நபர் கைது

சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய நபர் கைது கோவை, ஜன.19- சைபர் குற்றவாளிகளுக்காக 39 வங்கி கணக்குகளை துவக்கி உதவிய நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளில் ரூ.1.90 கோடி பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர்  யுவராஜ் (71). இவர் ஆன்லைன் முதலீடு செய்வது தொடர்பாக  இணையத்தில் தேடியுள்ளார். அதன் மூலம் தனியார் நிறுவனத் தின் பெயரில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் யுவாராஜ் இணைக்கப்பட்டுள்ளார். அதில் முதலீடுகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதனை நம்பி யுவராஜ் பல தவணைக ளில் ரூ. 1 கோடியே 65 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள் ளனர். ஒரு கட்டத்தில் தனக்கு லாபம், அசல் என ஏதும் வர வில்லை என உணர்ந்த யுவராஜ் அந்த பணத்தை எடுக்க  முயன்றார் ஆனால் முடியவில்லை. தனியார் நிறுவனத்தி னர் வழங்கிய செல்போன் எண்ணும் செயல்படவில்லை. ஆன்லைன் மூலமே கேட்ட போது, மேலும் பணம் செலுத்தி னால் மட்டுமே முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த யுவராஜ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். யுவராஜ் பணம் அனுப்பிய வங்கி கணக்கை போலீசார்  ஆய்வு செய்த போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதப்பன் (39) என்பவரது இரண்டு வங்கி கணக்கிற்கு மட்டும்  ரூ.13 லட்சம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீ சார் மாதப்பன் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது,  அடிக்கடி அவரது வங்கி கணக்கிற்கு அதிகளவு பணபரி வர்த்தனை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து மாதப் பனை பிடித்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரி டம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒசூ ரைச் சேர்ந்த மாதப்பன் கணினி மையம் அமைத்து, அதன்  மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கணினி மையத்தை மூடியுள்ளார். அதன் பின்னர் வருவாய்க்காக ஆன்லைன் மூலம் மாதப்பன் வேலை தேடியுள்ளார். அப்போது டெலி கிராம் செயலி மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பழக்க மாகியுள்ளனர். அவர்கள் வங்கி கணக்கை துவங்கி தங்களி டம் கொடுத்தால் 5 சதவிதம் வரை கமிசன் தருகிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து பல்வேறு வங்கிகளில் தனது  ஆவணங்களை கொடுத்து வங்கி கணக்குகளை துவங்கி,  அதன் விபரங்களையும், ஏடிஎம் அட்டை என அனைத்தை யும் அந்த நபர்களுக்கு வழங்கியுள்ளார். அதன் மூலம் மோசடி  செய்து பணம் சம்பாதிக்கும் அந்த நபர்கள் அதற்கான கமிஷ னையும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மாதப்பன் மொத் தம் 39 வங்கி கணக்குகளை துவங்கியுள்ளார். இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 1.90 கோடி ரூபாய்  அளவிற்கு பண பரிவத்தனை செய்யப்பட்டது தெரியவந்தது.  இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து யுவ ராஜ் இழந்த பணத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் தருமபுரி, ஜன.19- அரூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட  பொதுமக்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்டது அண்ணாமலை பட்டி கிராமம். இப்பகுதிக்கு சரிவர குடிநீர் விநி யோகம் செய்யப்படுவதில்லை எனக்கூறி, சனியன்று அப்ப குதி பொதுமக்கள் மொரப்பூர் சாலையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த கம்பைநல்லூர் காவல் துறையினர், மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட்ட பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, போலீசார் அனுமதியின்றி போக்கு வரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட அண்ணாமலை பட்டி கிராமத்தைச் 24 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மலை கிராமங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமை வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜன.19– உடுமலைப்பேட்டை மலைப்பகுதி யில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமை வழங்க தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் கோ.செல்வன் விடுத் துள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட் டம், உடுமலைப்பேட்டை மலைப்பகுதி யில் 15 மலை கிராமங்கள் உள்ளன.  இங்குள்ள மக்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குரிமை  உள்ளது. ஆனால், உள்ளாட்சித் தேர்த லில் வாக்குரிமை இல்லை. உள்ளாட்சித்  தேர்தலில் வாக்குரிமை கோரி பல  ஆண்டு காலமாக மலைவாழ் மக்கள்  சங்கம் போராடி வருகிறது. இந்நிலை யில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் நான்கு வன கிராமங்களை  உள்ளடக்கி தளி பேரூராட்சியுடன்  இணைத்து வாக்குரிமை வழங்கப்பட் டது. இன்னும் 10 வன கிராமங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை இல்லை. 2006 வன உரிமைச் சட்டப்படி  கிராம எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாவும், விவசாய நிலப்  பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, கருமுட்டி, ஈசல்திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல்,  ஆகிய பகுதிகளுக்கு உள்ளாட்சிகளில்  மலைவாழ் மக்களுக்கு வாக்குரிமை இல்லை. எனவே, மலைப்பகுதியில் உள்ள கிராமங்களை இரண்டு ஊராட்சிகளாக பிரித்து மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு  உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை வழங்க வேண்டும். மேலும், தனி  ஊராட்சிகளாகப் பிரிக்கும் வரை, சம் பந்தப்பட்ட வருவாய் கிராமங்களோடு இருக்கும் உள்ளாட்சிகளில் இணைக்க  வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள் ளது.

கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் மீட்பு

கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் மீட்பு உதகை, ஜன.19- கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 கரடிகளை  வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுப் பகுதிகளில் கரடிக ளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் மட்டு மன்றி பகல் நேரத்திலும் ஊருக்குள் கரடிகள் உலா வருகின் றன. இந்நிலையில், சனியன்று கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூர் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக் குள் இரண்டு கரடிகள் தவறி விழுந்து நீண்ட நேரமாக சப்த மிட்டுக் கொண்டிருந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் பெரிய ஏணியை இறக்கி வைத்தனர். இதை யடுத்து 3 மணி நேரத்துக்குப் பின் இரண்டு கரடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஏணி வழியாக வெளியே வந்தன. சிறிது நேரம் அங்கேயே உலாவிக்கொண்டிருந்த கரடிகள், அரு கிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.

குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை

குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை கோவை, ஜன.19- தெற்குபாளையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக் குள் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த வீட்டில் சமையல்  பொருட்களை சேதப்படுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே  உள்ள கூடலூர் நகராட்சி குடியிருப்புப் பகுதிக்குள், கடந்த  மூன்று நாட்களாக ஒற்றை ஆண் யானை புகுந்து வருகிறது.  இரு தினங்களுக்கு முன் வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி  வேலுமணி என்பவரை அந்த யானை தள்ளி விட்டதில், அவர்  உயிரிழந்தார். தொடர்ந்து அதே யானை அப்பகுதியில் உள்ள  விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து  சேதப்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், சனியன்று இரவு  தெற்குபாளையம் அருகே கென்னடி தென்றல் அவன்யூ விற்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அந்த ஒற்றை  ஆண் யானை புகுந்துள்ளது. இதையறியாத வடமாநில தொழிலாளர்கள் கதவை திறந்து வைத்துக்கொண்டு சமை யல் செய்து கொண்டிருந்தனர். திடீரென வீட்டின் முன்பு வந்த  யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அறையின்  ஓரத்தில் சென்று பதுங்கிக் கொண்டனர். அந்த யானை தும் பிக்கையால் விட்டிற்குள் இருந்த ரேசன் அரிசியை கீழே கொட்டி சாப்பிட்டது. மேலும், உள்ளே வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள் மற்றும் கையில் கிடைத்த எல்லா வற்றையும் இழுத்து வெளியே வீசியது. இதுகுறித்து தகவ லறிந்த வந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், பட்டாசு வெடித்து அந்த யானையை விரட்டினர்.