நாமக்கல், ஜன.19- பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஏராளமா னோர் பணியிடங்களுக்கு திரும்புவதால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. தமிழக முழுவதும் கடந்த ஜன.11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வெளியூர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கல்வி பயில்ப வர்கள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்க ளில் பணிபுரிந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஞாயி றன்றுடன் விடுமுறை நிறைவு பெற்றதால், பணிகளுக்கு செல்ல ஆயத்தமாகினர். இதனடிப்படையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஞாயிறன்று மாலை சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பேருந்து களில் செல்வதற்கு முண்டியத்துச் சென்றனர். மேலும், பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நெரிசலாக நின்றபடி பயணித்தனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இருப்பினும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.