world

img

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் சிபிஎம் மத்தியக்குழு வரவேற்பு

புதுதில்லி, ஜன.19-  பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மிகக்கொடிய யுத்தம் நடத்தி வந்த நிலையில், ஜனவரி 19 ஞாயிறு முதல் இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அம லுக்கு வந்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வரவேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜனவரி 17-19 தேதிகளில் கொல் கத்தாவில் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து அது வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:   காசாவில் போர்நிறுத்தம்  ஜனவரி 19 முதல் அமலுக்கு வரும் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந் தத்தை மத்தியக்குழு வரவேற்கி றது. பதினைந்து மாதங்களுக்கும் மேலாக அங்கே காசாவில் இருந்த  பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் ஏவப்பட்ட இனப்படு கொலை யுத்தத்தில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டார்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் காயம் அடைந் தார்கள்.  ஆறு வாரங்கள் நீடிக்கவுள்ள முதல் கட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் அரசியல் தீர்வு மீண்டும் ஏற்படும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை உறுதி செய்வது இப்போது முக்கியமாகும். அமைதி நிலை நாட்டப்படுவதையும், சுதந்திர  பாலஸ்தீன அரசை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசாங்கம் இராஜ தந்திர ரீதியாக செயல்பட வேண்டும். 

.ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்டமுன்வடிவுகள் 

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக இரு சட்ட முன்வடிவுகளை மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருப்பதை மத்தியக் குழு குறித்துக்கொண்டது. முதலாவது, அரசமைப்புச்சட்ட (129ஆவது திருத்த) சட்டமுன்வடிவு ஆகும். இது அரசமைப்புச்சட்டத்தில் தற்போது இருந்துவரும் மூன்று பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டுவரவும், புதிதாக ஒரு பிரிவை அறிமுகப்படுத்திடவும் முன் மொழிந்திருக்கிறது. இத்திருத்தங் களில் ஒன்று, மக்களவை அதற்கான காலவரையறை முடி வதற்கு முன்பே அது கலைக்கப் படுமானால், மீதம் இருக்கிற காலத் திற்கு மட்டுமே அடுத்த மக்கள வைக்கான தேர்தல் நடத்தப் படும் என்பதாகும். இதன் பொருள்,  மக்களவை மூன்றாண்டு காலம் கழித்து கலைக்கப்படுமானால், அடுத்த தேர்தல் என்பது இரண்டு  ஆண்டு காலத்திற்கு மட்டுமே யாகும். இதேபோலவே மாநில சட்ட மன்றங்களும் இடையிலேயே கலைக்கப்பட்டால், மீதம் உள்ள  காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். இது, அரசமைப்புச் சட்டத்தில் தற்போது அளிக்கப் பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாய கத்தின் அடிப்படைத் திட்டத்திற்கே  எதிரானதாகும். மாநில சட்டமன்றங் களின் பதவிக்காலத்தை இவ்வாறு குறைப்பது, கூட்டாட்சி தத்துவத் திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மீதும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திடும்.  இந்த இரண்டு சட்டமுன்வடிவு களும் கூட்டு நாடாளுமன்றக் குழு வுக்கு மேலும் நுண்ணாய்வு செய்வ தற்காகவும் பரிசீலனை செய்வதற் காகவும் அனுப்பப்பட்டிருக்கின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  ஏற்கனவே ஒரே தேசம், ஒரே  தேர்தல்-க்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தியிருக்கிறது. புதிதாகக் கொண்டுவரும் இந்த அரசமைப்புச் சட்ட திருத்த சட்டமுன்வடிவுகள் ஜனநாயக விழுமியங்களையும், கூட்டாட்சி தத்துவத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டும். 

மசூதி-கோவில் தாவாக்கள் 

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள்  சட்டத்தினை மீறி பல்வேறு மசூதிகள் இருந்த  இடங்களில் கோவில்கள் இருந்தன எனக்கூறியும் அவை குறித்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  கோரி பல்வேறு கீழமை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. மேற்கு உத்தரப் பிரதேசம் சம்பலில்  இவ்வாறு நடந்திருக்கிறது. அங்கேயுள்ள நீதிமன்றம் மனு தாக்கல் செய்த அன்றே ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆணையை யும் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் காரணமாக கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து அதில் ஐந்து முஸ்லீம் இளைஞர்கள் மரணம் அடைந்திருப்பது, எந்த அளவிற்கு அங்கே ஆட்சி செய்திடும்  மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும் இந்துத்துவா சக்திகளின் நிகழ்ச்சி  நிரலை முன்னெடுத்துச் சென்றுகொண்டி ருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.  இதனைத் தொடர்ந்து ஆஜ்மீரில் உள்ள  நீதிமன்றத்திலும் இதேபோன்று ஆஜ்மீர் ஷெரீப் தர்காவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  இந்து அமைப்புகளின் சில மனுதாரர் களால் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்திற்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதி மன்றங்களில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகள் மீதான விசாரணைகளுக்கும் தடை விதித்துள்ளது.  உச்சநீதிமன்றம் 1991ஆம் ஆண்டு வழி பாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லுபடி யாகும் தன்மையை நிலைநிறுத்தவும், மதவழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பும் எவ்விதமான முயற்சிக்கும் இடம் அளிக்காது அந்தச்சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்தியக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிமுறைகள் 

மத்தியக்குழு 2025 பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் வரைவுக்குக் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறது. இது, மாநில அரசாங்கங்களால் நடத்தப் படும் பல்கலைக் கழகங்களில் துணை  வேந்தர்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கு இருக்கும் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்கள் மாநிலங்களில் உள்ள ஆளுநர்/வேந்தரே மூன்று நபர்கள் கொண்ட தெரிவுக்குழு நியமனம் செய்வதற்கான அதிகாரத்தைப் பெறுவார் என்றும், அந்த மூவரில் வேந்தரால் பரிந்துரைக்கப்படும் நபர் அந்தக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் கூறுகிறது.  தெரிவுக்குழுவில் எவரை  நியமிக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம்  எதுவும்  கூற முடியாது. இவ்வாறு ஒன்றிய அர சாங்கம் இந்தத் திருத்தங்களின் மூலமாக தங்களுக்கு வேண்டிய நபர்களை மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களி லும் ஆளுநர்கள்/வேந்தர்கள் மூலமாக நியமனம் செய்துகொள்ள முடியும். ஆளுநர்கள் தாங்கள் வேந்தர்கள் என்ற முறையில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் நடைமுறையில் இருந்துவரும் அனைத்து நெறிமுறைகளையும் மீறி தான்தோன்றித்தனமாக ஆர்எஸ்எஸ்/பாஜக ஆதரவு துணை வேந்தர்களை நியமனம் செய்ய முயன்றார்கள் என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இது ஒரு ஆபத்தான சரத்து. இதனை எதிர்த்திட வேண்டும். இந்த வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவிடுமானால், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் இந்தத்  திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியது அவசியமாகும். 

வேளாண் சந்தை தொடர்பான வரைவு தேசியக் கொள்கை கட்டமைப்பு 

இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சந்தை தொடர்பான  வரைவு தேசியக் கொள்கை கட்டமைப்பு (Draft National  Policy Framework on Agricultural Marketing), விவசாயிகள் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களில் இருந்த  சாராம்சங்களை மீளவும் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியேயாகும். இந்த வரைவு, தனியார் மொத்த சந்தைகளை நிறுவவும், கார்ப்பரேட்டுகள் நேரடி பண்ணை வாயில் திறந்திடவும், தற்போது காலங்காலமாக இருந்துவரும் பாரம்பரிய சந்தைகளை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றியமைத்திடவும், மாநில அளவில் ஒரேவிதமான சந்தை கட்டணம் நிர்ணயம் செய்திடவும், வர்த்தக  உரிமம் அளிக்கும் முறையைக் கொண்டு வரவும் வழிவகுக்கிறது. இந்த வரைவானது பெரும் கார்ப்பரேட்டுகள், தற்போது இயங்கிவரும் வேளாண் சந்தைகளை ஓரங்கட்டிவிட்டு, நேரடியாகவே விவசாயி களிடமிருந்து உற்பத்திப் பொருள்களை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுக் கிறது. இதற்கு எதிராக விவசாய சங்கங்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் மேற்கொள்ள விருக்கும் கிளர்ச்சிப்போராட்டங்களுக்கு மத்தியக்குழு தன் முழு ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் கொள்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிக்கிளைகளும் அணிதிரளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. தேர்தல் ஆணைய விதிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்ச மாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குடிமக்கள் வீடியோ மற்றும் பிற டிஜிட்டல் தடங்கள் உள்ளிட்ட மின்னணு பதிவுகளை அணுகுவதைத் தடுக்கும் விதத்தில் தேர்தல் விதிகளில் மாற்றங்களை அறிவித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் பிற்போக்கு நடவடிக்கை, தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மையின் மீதான மற்றொரு தாக்குதலாகும்.  இது தொடர்பாக விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்தியக்குழு கோருகிறது.  தமிழில்: ச.வீரமணி