தமிழக அரசே! மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது நியாயம் தானா? இந்தக் கேள்வியுடன் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் ஜனவரி 21 அன்று நடைபெற உள்ளது.
தமிழக அரசின் நிலைப்பாடு
தமிழகத்தில்முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது ஏற்புடையதல்ல. மாற்றுத்திறனாளிகள் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது சமூகநீதி, சமநீதி அடிப்படையில் ஆட்சி நடத்தும் தமிழக அரசின் கடமை யாகும்.
அண்டை மாநிலங்களின் முன்னேற்றம்
ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 4,000 முதல் 10,000 வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசுதான் அனைத்து அம்சங்களிலும் முன்னேறிய முதன்மை மாநிலமாக விளங்குவதாக சொல்லப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை மட்டும் உயர்த்தி கொடுக்காமல் மாற்றுத்திறனாளிகளை மீண்டும், மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல.
தற்போதைய நெருக்கடிகள்
- உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் வேதனையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் - உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்த மாற்றுத்திற னாளிகளுக்கு திடீரென இரண்டு மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது - கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை - சட்டப்படி நான்கு மணி நேர வேலைக்கு பதிலாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை வேலை வாங்கப்படு கிறது - வேலை செய்த நாட்களுக்கான கூலி மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது
போராட்ட முடிவுக்கான காரணங்கள்
பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகும் தமிழக அரசு தீர்வு காண முன்வராத சூழலில், மாற்றுத்திறனாளி கள் வேறு வழியின்றி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கிறோம்.
முக்கிய கோரிக்கைகள்
1. உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல
ரூபாய் 6,000 முதல் 10,000 வரை உயர்த்த வேண்டும்
2. நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்
3. காத்திருப்போருக்கு உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும்
4.100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்
5.சட்டப்படி நான்கு மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்
6.கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்
போராட்ட விவரம்
தமிழகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் சிறை நிரப்பும் போராட்டம் ஜனவரி 21 அன்று நடைபெற உள்ளது.
அறைகூவல்
தமிழக அரசு இனியும் மாற்றுத்திறனாளிகளை போராட விட்டு வேடிக்கை பார்க்காமல், கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் வெற்றி பெற, தமிழகம் முழுவதும் இருக்கின்ற மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் அனைவரும் சிறை நிரப்பும் போராட்ட களத்திற்கு அலை கடலென திரள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.