காசா போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் ஹமாஸ்/ இஸ்ரேல்/ கத்தார்/ அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெ ழுத்திட்டுள்ளன என அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் அமைச்ச ரவை இந்த ஒப்பந்தத்தை இன்னும் அங்கீ கரிக்கவில்லை என கூறப்படுகிறது. நேதன்யாகு கூட்டணி அமைச்சரவையில் உள்ள அதி தீவிர வலதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒப்பந்தம் நிராகரிக்கப்படுமா?அல்லது கூட்டணி மாறுவதன் மூலம் ஒப்பந்தம் அமலுக்கு வருமா என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும். எனினும் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்தத்தையும் இஸ் ரேல் மதிப்பதில்லை என்பது கடந்த கால அனுபவம். சமீபத்திய லெபனான் போர் நிறுத்த மீறல்கள் சிறந்த உதாரணம். இதற்கிடையே இந்த ஒப்பந்தம் யாரு டைய சாதனை என ஜோபைடனுக்கும் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையே பட்டி மன்றம் நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகளில் பைடனின் பிரதிநிதி பிரெட் மெகுர்க் டிரம்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகிய இருவரும் பங்கேற்ற னர். போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் இல்லையெனில் அமெரிக்காவின் உதவி கிடைக்காது என டிரம்ப்பின் பிரதிநிதி கிட்டத்தட்ட மிரட்டியதன் காரணமாகவே நேதன்யாகு அடிபணிந்தார் என பரவ லாக செய்திகள் உள்ளன. பைடன் ஒரு ஆண்டில் செய்ய தவறியதை டிரம்ப் ஒரே நாளில் செய்தார் என இஸ்ரேலிய பத்திரிகைகள் கூறுகின்றன. எனினும் பைடனுக்கு இணையாக டிரம்பும் இஸ்ரே லின் தீவிர ஆதரவாளர் என்பதை புறம் தள்ள முடியாது. போரை நிறுத்த வேண்டும் என தனக்கு வாக்களித்த ஒருபிரிவினரின் எதிர்பார்ப்பை இப்பொழுது டிரம்ப் நிறை வேற்றினாலும் பின்னர் என்ன நடக்கும் எனும் கவலை இல்லாமல் இல்லை.
யாருக்கு வெற்றி?
கிட்டத்தட்ட 450 நாட்களுக்கும் அதிக மாக நடந்த இஸ்ரேலின் இனப்படு கொலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டா லும் யாருக்கு வெற்றி எனும் கேள்வி முன்னுக்கு வருகிறது. ஹமாசை முற்றி லும் அழிப்பதுதான் இந்த போரின் இலக்கு என நெதன்யாகு கூறினார். இதுவே இஸ்ரேல் சமூகத்தின் கருத்தாகவும் இருந் தது. 47,000 பாலஸ்தீன மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். 1,10,000 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 70% பெண்களும் குழந்தைகளும். எனினும் லான்செட் எனும் இதழ் 41% கூடுதலாக மரணம் நடந்துள்ளது என மதிப்பிடு கிறது. 90% வீடுகளும் அனைத்து கல்வி நிலையங்களும் அழிக்கப்பட்டன. 800 மசூதிகளும் 4 பழமையான தேவாலயங்க ளும் தரைமட்டமாகின. பாதிக்கும் அதிக மான மருத்துவமனைகளும் 1050 மருத்து வர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்க ளும் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிக மான பத்திரிகையாளர்கள் பலியாயினர். 2024 கிறிஸ்துமசுக்கு பின்னர் மட்டும் குளிர் காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் மரணித்தனர். விவசாய நிலத்தில் 60% அழிந்தது. இத்தனைக்கு பின்னரும் ஹமாசை முழுமையாக இஸ்ரேல் ராணுவம் அழிக்க இயலவில்லை. சுமார் 4000 முதல் 5000 வீரர்கள் கொல்லப்பட்டாலும் அதைவிட கூடுதலாக புதிதாக ஹமாசில் வீரர்கள் இணைந்துள்ளனர். ஹமாசின் எண் ணிக்கை அதிகமாகியுள்ளது என அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஹமாசின் தாக்கு தலில் சுமார் 900 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 10,000 பேர் கை அல்லது காலை இழந்துள்ளனர். ஆயிரக்க ணக்கானவர்கள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலகின் முதல் ராணுவமான அமெரிக்காவின் அனைத்து ஆயுத உதவியுடனும் வளைகுடா பகுதி யில் மிக வலுவான ராணுவத்தையும் கொண்டுள்ள இஸ்ரேல் ஒரு பீரங்கி கூட இல்லாத ஹமாசை அழிக்க முடிய வில்லை என்பது அதன் பெரிய தோல்வி எனில் மிகை அல்ல.
காசா பகுதியிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றிலும் அகற்றுவது என இஸ்ரேலின் நோக்கமும் நிறைவேற வில்லை. மேலும் சர்வதேச கிரிமினல் நீதி மன்றத்தின் கைது வாரண்ட் உள்ளதால் நேதன்யாகுவும் வேறு சில இஸ்ரேல் தலை வர்களும் பல நாடுகளுக்கு செல்ல இய லாது. சர்வதேச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கும் இஸ்ரேலின் தலையில் தொங்கும் கத்தியாக உள்ளது. சர்வதேச சமூகத்திடம் இஸ்ரேல் தனிமைப் பட்டுள்ளது. பொருளாதாரம் சரிந்துள் ளது. பாதிக்கும் அதிகமான தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இவையெல்லாம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள். மறுபுறத்தில் ஹமாசின் இலக்கு நிறைவேறவில்லை என்பதும் உண்மை. 2023ஆம் ஆண்டு தனது தாக்குதலின் இலக்கு இஸ்ரேலில் உள்ள அனைத்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது தான் என ஹமாஸ் கூறியது. ஆனால் இப்பொழுது அமலாகும் ஒப்பந்தத்தின் படி அதிகபட்சம் 20% கைதிகள்தான் விடுதலை செய்யப்படுவர். இன்னும் 80% பேர் அதாவது இன்னும் 7000 முதல் 8000 பேர் இஸ்ரேலிய சிறைகளில் நீடிப்பர். மேலும் சின்வர் மற்றும் ஹனியே உட்பட ஹமாசின் பல தலைவர்கள் கொல்லப் பட்டனர். ஹிஸ்புல்லாவின் தலைவரும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வருமான நஷ்ரல்லா கொல்லப்பட்டார். லெபனான் மூர்க்கத்தனமாக தாக்கப் பட்டது. ஹமாசுக்கு ஆதரவாகச் செயல் பட்டதால் ஈரானும் ஏமனும் பல தாக்குதல்க ளுக்கு ஆளாயின. இந்த நிகழ்வுகளின் ஒரு விளைவாக சிரியாவின் அசாத் ஆட்சி கவிழ்ந்தது. இது ஹிஸ்புல்லாவுக்கும் ஹமாசுக்கும் பாதகமாக அமைந்தன. எனவே ஹமாசின் நோக்கமும் முழுமை யாக நிறைவேறவில்லை. எனினும் மிகப்பெரிய தோல்வி இஸ்ரேலுக்குதான் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக அமலாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்டம் வெற்றிகரமாக அமலானால் அடுத்த இரு கட்டங்களும் இறுதி செய்யப் படும். முதல் கட்டம் ஏழு வாரங்களுக்கு அமலில் இருக்கும். முதல் கட்டத்தில் கீழ்க் கண்ட அம்சங்கள் அமலாக்கப்படும்: H இஸ்ரேல் ராணுவம் மத்திய காசா பகுதியிலிருந்து படிப்படியாக வெளியே றும். காசா மக்கள் மீண்டும் வடக்கு காசா வில் குடியேறலாம். H காசா பகுதிக்கு ஒரு நாளைக்கு 600 டிரக்குகள் மூலம் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உதவிப் பொருட்களும் அனுமதிக்கப்படும். Hஇதில் 300 டிரக்குகள் கடுமையாக பாதிக் கப்பட்ட வடக்கு காசா பகுதிக்கு செல்லும். H 50 டிரக்குகள் தினமும் பெட்ரோல்/ டீசல் உட்பட எரிசக்தியை கொண்டு செல்லும். Hஹமாஸ் 33 பணயக்கைதிகளை இரண்டு கட்டமாக விடுவிக்கும். Hமுதலில் 9 கடும் காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் விடு விக்கப்படுவர். பதிலுக்கு பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகள் 110 பேரை இஸ்ரேல் விடுவிக்கும். H2023 அக்டோபர் தாக்குதலில் ஈடுபடாத 1000 காசா பகுதி மக்களை இஸ்ரேல் விடுவிக்கும். H50 வயதுக்கு மேல் உள்ள ஹமாஸ் விடுவிக்கும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 3 பாலஸ்தீன ஆயுள் தண்டனை சிறைவாசியும் இதர 27 சிறை வாசிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும். Hசில முக்கிய ஹமாஸ் தலைவர்கள் விடு விக்கப்படுவர். Hரஃபா எல்லை பகுதி வழியாக காயம டைந்த பாலஸ்தீனர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அந்த பட்டியலை இஸ்ரேலும் எகிப்தும் அங்கீகரிக்க வேண்டும். Hஒவ்வொரு இஸ்ரேலிய சிவில் பணயக் கைதிக்கு 30 பாலஸ்தீன சிறைவாசி களும் ஒவ்வொரு இஸ்ரேலிய பெண் ராணுவ பணயக்கைதிக்கு 50 பாலஸ் தீன சிறைவாசிகளையும் இஸ்ரேல் விடு விக்கும். H2023 அக்டோபர் 7க்கு பின்னர் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனப் பெண்களும் 19 வயதுக்கு குறைவான குழந்தைகளை யும் இஸ்ரேல் விடுதலை செய்யும். இதன் மூலம் அதிகபட்சம் 1650 பாலஸ்தீன சிறைவாசிகள் விடுதலை பெறுவர். Hஉயிருடன் இருக்கும் அனைத்து பண யக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்களின் உடல்கள் பரிமாறிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். Hஒப்பந்தம் அமலாகிறதா என்பதை கத்தாரும் அமெரிக்காவும் மேற்பார்வை செய்யும். இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமலா னால் ஹமாஸ் குறிப்பிடத்தக்க வெற்றி பெறும். அதே சமயம் பணயக்கைதிகள் விடுதலை மூலம் நேதன்யாகு தனக்கு எதிரான கணிசமான அதிருப்தியை அகற்ற இயலும்.
இனி என்ன?
ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வெற்றி பெற்றால் இரண்டாவது கட்டம் அமலா வதில் பெரிய சிக்கல் ஏற்படாது. ஆனால் மூன்றாவது கட்டம் மிக சிக்கலானது. காசா பகுதியை நிர்வாகம் செய்வது யார் என்பது மூன்றாவது கட்டத்தில் விவாதிக் கப்படும். ஹமாசை நிர்வாகம் செய்ய இஸ்ரேல் அனுமதிக்காது. தனக்கு அடி பணியும் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன நிர்வாகம் தேவை என அமெ ரிக்கா அல்லது இஸ்ரேல் வலியுறுத்த வாய்ப்பு உண்டு. காசா பகுதியை நிர்வா கம் செய்வது என்பது அப்பாஸின் நீண்ட நாள் கனவு. தனது விசுவாசத்தை நிரூபிக்க சமீபத்தில் மேற்கு கரையில் பல தனது சொந்த இனத்தை சார்ந்த பாலஸ்தீன போராளிகளை அப்பாஸ் நிர்வாகம் கைது செய்தது. சிலர் கொலையும் செய்யப் பட்டனர். ஆனால் காசா மக்கள் அப்பாஸ் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே! மறுபுறத்தில் ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்தவுடன் போரை மீண்டும் தொடங்க வேண்டும் என இஸ்ரேலிய வலதுசாரிகள் கோருகின்றனர். இதனை பெரும்பான்மையான இஸ்ரேலிய சமூகம் அங்கீகரிக்கிறது. இன்று போர் நிறுத் தத்தை ஆதரிக்கும் டிரம்ப் பின்னர் என்ன நிலைபாடு எடுப்பார் என்பது எவரும் கணிக்க இயலாது. லெபனானில் போர் நிறுத்தத்துக்கு பின்னர் குறைந்த பட்சம் 100 முறை இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறி யுள்ளது. காசாவிலும் இஸ்ரேல் ஒப்பந் தத்தை மீறாது என உத்தரவாதம் இல்லை. இந்த ஒப்பந்தத்துக்கு அப்பால் சுதந்திர பாலஸ்தீனம் எனும் அடிப்படை கோ ரிக்கை உள்ளது. உலக தேசங்கள் இஸ்ரே லுக்கு எதிராக நேரடியாக தலையிடாமல் அல்லது குறைந்தபட்சம் இஸ்லாமிய தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக களத்து க்கு வராமல் சுதந்திர பாலஸ்தீனம் ஏற்ப டப்போவது இல்லை. சுதந்திர பாலஸ் தீனம் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை.