மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு திருநெல்வேலி, ஜன.18- பாபநாசம் அணை கட்டும் போது கட்டிடப் பணிகளில் ஈடுபட்ட தொழி லாளர்களின் வாரிசுகள் நான்கு ஐந்து தலைமுறைகளாக காரையாறில் குடி யிருந்து வரும் குடும்பங்களை அங்கி ருந்து காலி செய்யுமாறு வனத்துறை அதிகாரிகள் கடுமையான கெடுபிடி களை ஏற்படுத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். குடியிருப்பு வாசிகளின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு கூட குடும்ப உறவி னர்களை மேலே செல்ல அனுமதிக்க மறுப்பது, குடியிருப்பு வாசிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கூட உறவி னர்களை துஸ்டி வீட்டுக்கு கூட வரவிடா மல் தடுப்பது, தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிப்பது, கால்நடை களை வளர்க்க தடை விதிப்பது, மின் வநியோ கத்தை நிறுத்துவது போன்ற கெடுபிடிகளில் வனத்துறையினர் ஈடுபடு கின்றனர். குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டு தீர்வை, மின் இணைப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு என்று அனைத்தும் உள்ளன. ஆனாலும் கூட அவர்களை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று கடுமையான கெடுபிடிகளை வனத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இத்தகைய கெடுபிடி களை கண்டித்தும் ஐந்து ஆறு தலை முறைகளாக குடியிருக்கும் குடும்பங் களை அங்கேயே குடி இருக்க அனு மதிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறப்பட்டது. இதில் கட்சியின் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் இசக்கி ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், மூத்த தலைவர் ரவீந்திரன், பாளை யங்கோட்டை தாலுகா செயலாளர் மதுபால் போக்குவரத்து அரங்க கமிட்டி செயலாளர் காமராஜ் பாளையங்கோட்டை தாலுகா கமிட்டி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் காரையாறு குடியிருப்பு வாசிகளும் பங்கேற்றனர்.