தஞ்சாவூர், ஜன.18 - தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினி தமிழ் அறிஞர் விருது பெற்றுள்ள, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளர், முடச்சிக்காடு முனைவர் இரா.அகிலனுக்கு பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார். தமிழ் வழிக் கல்வி இயக்கம் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வாழ்த்திப் பேசினார். மருத்துவர் துரை. நீலகண்டன், ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விருது பெற்றுள்ள முனைவர் இரா.அகிலன் ஏற்புரையாற்றினார். தமிழ் வழி கல்வி இயக்கம் தா.பழனிவேல் நன்றி கூறினார்.