மயிலாடுதுறை, ஜன.18 - மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள அருமை முதியோர் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி நேரில் பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள அருமை முதியோர் இல்லம் கடந்த 2012 முதல் செயல்பட்டு வருகிறது. அதேபோல் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி 1987 முதல் இயங்கி வருகிறது. இதில் முதியோர் இல்லத்தில் 25 முதி யோர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளியில் 25 மாண வர்களும் பயின்று வரு கிறார்கள். இந்நிலையில் அருமை முதியோர் இல்லத் தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், முதியோர்களி டம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முன்ன தாக முதியோர் இல்லத்தில் நடமாடும் காசநோய் பரி சோதனை சிகிச்சை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதியோர்களின் ஆடல், பாடல், கும்மியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் செந்தில்குமார், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.