world

img

ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்வு!

ஈரானின் உச்சத்தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2026 பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் நடந்த அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு விமானத் தாக்குதலில், ஈரானின் இரண்டாவது உச்சத்தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார்.
அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 8 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி (56) ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
இந்த முடிவை ஈரானின் முக்கிய மதத் தலைவர்கள் அடங்கிய “அசெம்ப்ளி ஆஃப் எக்ஸ்பெர்ட்ஸ்” (Assembly of Experts) அறிவித்துள்ளது. அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், “தீர்மானமான வாக்கெடுப்பின் மூலம்” மொஜ்தபா காமனெயி தேர்வு செய்யப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காமனெயியின் பின்னணி:
56 வயதான மொஜ்தபா காமனெயி1969 ஆம் ஆண்டு ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர், கோம் நகரில் மதப் பயிற்சி பெற்றவர். ஈரான் - ஈராக் இறுதிகட்ட போரில் பங்கேற்றுள்ளார்.
அவர் எந்தத் தேர்தல் பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் தனது தந்தையின் அலுவலகத்தில் முக்கிய அரசியல் அணுகலை கட்டுப்படுத்தும் வட்டாரத்தில் இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர் பாதுகாப்பு அமைப்புகளுடனும்( Islamic Revolutionary Guard Corps )நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11 ஆம் தேதிவரையில் அவகாசம் நீட்டிப்பு