tamilnadu

img

மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி! மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி!

மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி! மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி!

சென்னை அண்ணா அறிவாலயத்தி லுள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளி யிட்டு, அக்கட்சியின் தலைவரும், தமிழக  முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசி னார்.  அப்போது, “மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி அரசியல் கூட்டணி மட்டு மல்ல, கொள்கை கூட்டணி. திமுக வேட்பா ளர் பட்டியல் லேட்டாக வந்தாலும் லேட்  டஸ்டாக வந்துள்ளது. கூட்டணியில் உள்ள  கட்சிகளோடு கலந்து பேசியதன் மூலம்  அனைவரும் திருப்தியுடன் கையெழுத் திட்டனர். காலம் தாழ்த்தப்படவில்லை. ஒற்றுமைப்படுத்துவதற்காக இவ்வளவு நேரம் ஆனது” என்றார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர் களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “முதலில் இருந்தது மகா கூட்டணி. இப் போது இருப்பது மகாமகா கூட்டணி” என்று  கூறிய அவர், “நாளை (மார்ச் 29) மாலை  திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப் படும்” என்றார். மார்ச் 31 அன்று தாம் பிரச்சாரத்தை தொடங்குவதாக தெரிவித்த முதல மைச்சர், “துணை முதலமைச்சர் மார்ச் 31  அன்றும், கனிமொழி எம்.பி. 30-ஆம் தேதி யும் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்” என்றார்.  காலதாமதமாக தேர்தல் பணியை தொடங்கவில்லை என்று குறிப்பிட்ட முதல மைச்சர், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த  உடனேயே தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். எனவே, காலதாமதம் என்று  சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். “234 சட்டமன்றத் தொகுதிகளில் 164 திமுக வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். 70 தொகுதிகளை தோழமை கட்சிகளோடு பகிர்ந்து கொண்டுள்ளோம். அதில் 11 பேர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது என்றார். திமுக சார்பில் போட்டியிடும் 164 பேரில்  125 பேர் (சுமார் 80 சதவிகிதம்) பட்டதாரி கள். 15 பேர் மருத்துவர்கள், 17 பேர் பொறி யாளர்கள், 29 பேர் வழக்கறிஞர்கள், 7 பேர்  முனைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகளுக்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூ கங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 பெண் கள் போட்டியிடுகின்றனர்” என்றும் முத லமைச்சர் தெரிவித்தார்.