world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை  ஜெலென்ஸ்கி தயாரா?

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் ராணுவம் தொடர்ந்து உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதனை உக்ரைன் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஜெலென்ஸ்கி போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக பெயர் தெரிவிக்காத உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சிரியாவை துண்டாட  தயாரானது துருக்கி

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தலைமையில்  முதலீட்டு அமைச்சர்கள் உட்பட மிக முக்கிய மான நபர்கள் அடங்கிய குழு ஒன்று சிரியா செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் உதவியுடன் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் தலைமையிலான படை சிரியாவை கைப்பற்றிய பிறகு அந்நாட்டின் எண்ணெய் வளங்களை பங்கு போட்டு திருட அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் சிரியாவிற்கு எர்டோகன் தலைமையில் முதலீட்டாளர்கள் குழு ஒன்று செல்லவுள்ளது.  

ஆப்கானிஸ்தான் மீது பாக்.விமானப்படை தாக்குதல் 

பாகிஸ்தான் விமானப்படை  ஆப்கா னிஸ்தான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள னர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்திகா மாகாணத்தில் பர்மால் மாவட்டத்தில் டிசம்பர் 24 அன்று  நள்ளிரவு 7 கிராமங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்விளைவுகளை பாகிஸ்தான் எதிர்கொள்ளும்  என தலிபான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஓரளவு செயல்படும் கடைசி மருத்துவமனைகள் மீதும் குண்டுவீச்சு

காசா பகுதியில் ஓரளவு செயல்படும் கடைசி மருத்துவமனைகளில் ஒன்றான கமல் அத்வான் மருத்துவமனையை மூடக்கூறி இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.  போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், இன்குபேட்டர்கள் இன்றி குழந்தைகள் உள்ளிட்ட 400க்கும் அதிகமான நோயாளிகளை வெளியேற்றுவது சத்தியமற்றது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கமல் அத்வான், இந்தோனேசிய மருத்துவமனை, அல்-அவ்தா மருத்துவமனைகள் மீது 24 மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது.

ரஷ்யா சென்ற பயணிகள்  விமானம் விபத்து

அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் குரோஸ்னிக் விமானநிலை யத்திற்கு  பயணித்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மேற்கு கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பயணிகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 67 பயணிகள் பயணித்துள்ளனர். விபத் திற்கான காரணம் என்னவென்று வெளியிடப்பட  வில்லை.

பாலஸ்தீனர்களை திட்டமிட்டு பஞ்சத்தில் தள்ளும் இஸ்ரேல் : ஆக்ஸ்பாம் அறிக்கை அம்பலம்

காசா,டிச.25- பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு பஞ்சத்தில் தள்ளி வருவது ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. 2023 அக்டோபர் மாதம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு, காசா பகுதிக்கு இஸ்ரேலில் இருந்து கொடுக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் இஸ்ரேல் அரசு வெட்டியது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. நிவாரண அமைப்பு காசா பகுதிக்குள் கொண்டு செல்லும் உணவுப்பொருட்கள், மருந்துகள், குடிநீர் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் நிறைந்த வாக னங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தியது.இத்தகைய மோசமான செயலுக்கு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.  இந்நிலையில் ஆக்ஸ்பாம் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று அதிர்ச்சித்தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.  2024 அக்டோபர் மாதம் முதல் காசா விற்குள் வெறும் 12 லாரிகளில்  உணவு மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்பட் டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரி வித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் வடக்கு  காசாவிற்குள் 34 லாரிகள் எடுத்துச் செல்ல அனு மதிக்கப்பட்ட நிலையில்  வெறும் 12 லாரிகள் மட்டுமே இஸ்ரேல் ராணுவத்தால் அனுமதிக்கப் பட்டது தெரிய வந்துள்ளது.  அதுமட்டுமல்ல உணவு, தண்ணீர் உள்ள உதவி வாகனங்கள் காசாவிற்குள் சென்று விடக்கூடாது என இஸ்ரேல் ராணுவம்  திட்டமிட்டு   செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய காரணத்தால் தான் காசாவில் மிக மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.ஐ.நா., உதவி வாகனங் களை எடுத்துச் செல்ல அனுமதித்த பிறகும் கூட  ஜபாலியா அகதிகள் முகாமில் உதவி வாக னங்களை தடுத்து நிறுத்தி வருகிறது. உணவுகளை திருடும் இஸ்ரேல் ராணுவம்  உணவுப்பொருட்களை தடுப்பதுடன் இஸ்ரேல் ராணுவம் இருக்கும் பகுதிகளை ஐ.நா., உதவி வாகனங்கள் கடந்து செல்லும் போது பல வாகனங்களை இடையிலேயே நிறுத்தி  உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட் களை  கொடுத்து விட்டு செல்லுபடி துப்பாக்கி முனையில் இஸ்ரேல் ராணுவம் மிரட்டி திருடி வருகிறது. நவம்பர் மாதம் மட்டும் இவ்வாறு 11 லாரி களை  இஸ்ரேல் ராணுவம் கொள்ளையடித்துள் ளதை ஆக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆக்ஸ்பாம் நிறுவனத்தை போலவே நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதைத் தடுத்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலால் திட்ட மிட்டு உருவாக்கப்படுகிற இந்த செயற்கைப் பஞ்சம் மேலும் அதிக பாலஸ்தீனர்களை படுகொலை செய்யும் என குறிப்பிட்டுள்ளது.