3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்.
கலிபோர்னியா, ஜன. 16 - மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் 5 சதவீத தொழிலாளர் சக்தியாகும். செயல்திறன் அடிப்படையில் இந்த பணி நீக்கம் நடைபெறுகின்றது என இந்த பணிநீக்கத்திற்கு மிக மோசமான காரணத்தையும் அது தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்ட செயல்திறன் அடிப்படை பணி நீக்கம் என்ற தொழிலாளர் விரோத நடைமுறையை பின்பற்றுகின்றன. அதாவது தொழிலாளியின் உழைப்பு போதவில்லை அல்லது உற்பத்தி செய்யும் திறன் அவரிடம் இல்லை என தொழிலாளர்களை குற்றம்சாட்டி அவர்களை பணி நீக்கம் செய்து விடுகின்றன. இதன் பிறகு மீதமுள்ள தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை மூலம் ஒரு பயத்தை உருவாக்கி நிர்வாகத்தின் குற்றங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கேள்வி கேட்டு விடாமலும் சங்கமாக ஒன்றிணையாமலும் பிரிக்கும் வேலையையும் செய்கின்றன. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பணிகள் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு தான் மெட்டா நிறுவனமும் 3,600 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு அங்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் திட்டத்திற்கு சென்றுள்ளது என கூறப்படுகின்றது. தற்போது 3,600 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம் புதிதாக தகுதியுள்ள நபர்களை பணியமர்த்துவோம் என தெரிவித்துள்ளது. எனினும் மெட்டா நிறுவனம் வாக்குறுதியை நிறைவேற்றாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
.கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட இருந்த தடையை நீக்கியது யூனுஸ் அரசு
டாக்கா,ஜன.16- வங்கதேச உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு எதிரான கடைசி ஊழல் வழக்கில் இருந்தும் அவரை விடு வித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு இருந்த சட்டப்பூர்வ தடை நீங்கி யுள்ளது. கலிதா ஜியா மொத்தம் 17 ஆண்டு கள் சிறைத்தண்டனையை அனு பவித்து வந்தார். அனாதை இல்லம் தொடர்பான வழக்கில் 10 ஆண்டு களும், பிற ஊழல் வழக்குகளில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவர் அனுபவித்து வந்தார். ஹசீனா ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு 2024 நவம்பர் மாதமே இந்த வழக்கு களில் இருந்து ஜியா விடுவிக்கப் பட்டார். மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசு அமைதியை கொண்டுவரவும் ஜனநாயகப்பூர்வமான தேர்தலை நடத்தவும் முயற்சி எடுப்பதற்கு மாறாக அவாமி கட்சி தலைவர்களின் மீது பழிவாங்கும் வேலையில் ஈடு பட்டுள்ளது. மேலும் கலிதா ஜியா மீதான வழக்கு களை முடித்து வைத்து அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் வேலையையும் செய்துள்ளது.
இலங்கை ஜனாதிபதிக்கு சீனாவில் வரவேற்பு
கொழும்பு / பெய்ஜிங், ஜன.16 - இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நான்கு நாள் அரசுமுறை பயணமாக செவ்வாயன்று சீனா சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவரை சீன வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றார். அதன் பிறகு திஸாநாயக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நான்கு நாள் பயணத்தில் சீனாவுக்கும் - இலங்கைக்கும் இடையேயான பொருளாதாரம், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலா துறை, உள்கட்டமைப்புகள் என பல துறைகளில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்த ஜோ பைடன்
நியூயார்க்,ஜன.16- மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி செல்லவுள்ளது. எனவே அமெரிக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி யாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க மக்களுக்கு நிகழ்த்திய தனது இறுதி உரையில் ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த உரையில் டிரம்ப் மிகப்பெரிய பணக்காரர். அவர் தற்போது தேர்வு செய்துள்ள அமைச்சர்கள் குழுவும் மிகப்பெரும் பணக்காரர்கள் நிறைந்த குழுவாக உள்ளது எனவும் மறைமுகமாக விமர்சித்தார். (அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயகக்கட்சி இரண்டிலும் பெருமுதலாளிகளே தலைவர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ) பைடன் மேலும் பேசியதாவது : இன்று அமெரிக்காவில் அதிகளவில் செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சுயநலமான குழு உருவாகி வருகிறது. இது நமது முழு ஜனநாயகத்தை யும், நமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங் களையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாய மான வாய்ப்பையும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. ஒரு சில பெரும் செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் ஆபத்தான முறையில் குவிகிறது. அவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார்.