மாஸ்கோ, நவ.21- ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள இலக்கு களை இங்கிலாந்து வழங்கிய ஸ்ட்ராம் ஷேடோ (strom shadow) என்ற அதி நவீன நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் ஏவியதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. அமெரிக்க கொடுத்துள்ள அதிநவீன நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவின் மீது தாக்குவதற் காக உக்ரைன் பயன்படுத்தலாம் என பைடன் உத்தர விட்டதை தொடர்ந்து 6 ஏவுகணைகளை உக்ரைன் ஏவியது. இதனை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வீழ்த்திவிட்டன. இந்த தாக்குதலை தொடர்ந்து இங்கிலாந்து உக்ரைனு க்கு கொடுத்திருந்த ஸ்ட்ராம் ஷேடோ ரக ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியதாகவும், இதற்கு இங்கிலாந்து பகிரங்கமாக அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் இங்கி லாந்து பாதுகாப்புத் துறை செயலர் ஜான் ஹீலி, உக்ரைன் நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பேசி மறைமுக உத்தரவு கொடுத்திருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது. உக்ரைனுக்கான ஆதரவை இங்கிலாந்து லேபர் கட்சி தலைமையிலான அரசு இரண்டுமடங்காக அதிகரிப்பதாக ஹீலி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய போது குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அதி நவீன ஏவுகணைகளை பயன்படுத்தும் தொழில்நுட்பம் உக் ரைனிடம் இல்லை. இதற்கு நேரடியாக அந்நாடுகளின் ராணுவம் அல்லது நேட்டோ ராணுவத்தின் உதவி தேவை. அமெ ரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தின் இத்தகைய செயல் பாடு ரஷ்ய உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்தி யுள்ளது. அதேபோல வியாழனன்று ரஷ்ய ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக் ரைன் மீது பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த செய்தியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யவில்லை. அதே போல இங்கிலாந்து நாட்டின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியதா என்பது குறித்தும் ரஷ்ய தரப்பில் முழு விவரங்கள் கொடுக்கப்பட வில்லை.