world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போர் நிறுத்த தீர்மானத்தை  வீட்டோ செய்த அமெரிக்கா

காசா பகுதியில் போர்க் கைதிகளை விடு விப்பது மற்றும் உடனடி, நிபந்தனை யற்ற, நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என  ஐ.நா பாதுகாப்பு அவையில்  (UNSC) கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது ரத்து (வீட்டோ) அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய் துள்ளது. பாதுகாப்பு அவையில் உள்ள 14 உறுப் பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த போதும் அமெரிக்கா மட்டுமே போர் நிறுத்த  நடவ டிக்கையை நிராகரித்துள்ளது. இதற்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

‘குழந்தைகளின் கல்லறையாக காசா  மாறிவிட்டது’

காசா குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது என பாலஸ்தீன அகதிகளுக் கான ஐ.நா  நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸ்சா ரிணி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீன குழந்தைகள் படுகொலைசெய்யப்படு கிறார்கள், காயப்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்க ளது  பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு என அனைத்தை யும் இழந்து விட்டனர்.அவர்களின் குழந்தைப் பருவம் திருடப்பட்டு விட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

‘உக்ரைன்-ரஷ்யா போர்  ஆபத்தான கட்டத்தை எட்டியது’ 

உக்ரைன்-ரஷ்யா போர் ஆபத்தான கட்டத்தை நெருங்கி விட்டது என ஹங்கேரி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டோப் சலே-போப்ரோவ்னிக்ஸ்கி எச்ச ரித்துள்ளார்.  இது எப்போதும் இல்லாத வகையில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தங்களது வான் பாதுகாப்பு ஏவுகணைப் படைகளை உக்ரைன் இருக்கும் திசைநோக்கி ஹங்கேரியின் வடகிழக்குப் பகுதியில் நிலை நிறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

சக்தி வாய்ந்த புயலால்  அமெரிக்க மக்கள் பாதிப்பு

சக்தி வாய்ந்த ‘வெடி குண்டு’ புயலால் வடமேற்கு அமெரிக்க மாநிலங்களில் சுமார் 5 லட்சத்துக்கும்  மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 60 மைல்களுக்கும்  (96 கிலோ மீட்டர்) அதிகமாக வீசி வரும் காற்றால் நூற்றுக்க ணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது என அமெரிக்க வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த புயலின் காரணமாக வடக்கு கலிபோர்னியா, தென் மேற்கு ஓரிகானில் வெள்ளியன்று மோசமான வெள் ளம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரயில் நிலைய மேற்கூரை  இடிந்தது: அமைச்சர் ராஜினாமா 

செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த வழக்கில் செர்பியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டொமிஸ்லாவ் மொமிரோவிக் தனது ராஜினாமா கடி தத்தை சமர்ப்பித்துள்ளார். நவம்பர் 1 அன்று அந்நாட்டு ரயில் நிலையத்தில் மேற்கூரை இடித்து விழுந்ததில் 17 நபர்கள் சிக்கினர். அதில் 15 பேர் பலியாகினர். இத னையடுத்து மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் உட்பட  11 நபர்கள் கைது செய் யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.