world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது கம்போடிய அரசு அடக்குமுறை

தொடரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளராக இருந்து 2016 இல் கோல்ட்மேன் விருது பெற்ற கம் போடியா நாட்டை சேர்ந்த ஓச் லெங் என்பவரை அந் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.  கம்போடியா நாட்டின் தேசிய பூங்காவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதை அறிந்து அது குறித்து விசாரித்து வந்த முன்னணி சுற்றுச் சூழல் ஆர்வலரான  ஓச் லெங்காவையும் அவருடன் இருந்த  ஐந்து நபர்களை அந்நாட்டு அரசு அராஜகமாக கைது செய்துள்ளது என  உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

படுகொலைக்கு காரணம் தெரியும் முன் யூத இனவாத அரசியலை எடுத்த இஸ்ரேல் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சபாத் என்ற பழமை வாத  யூதக்  குழுவில் இஸ்ரேலிய மால்டோவான் ஸ்வி கோகன் என்பவர் மத குரு வாக பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை முதல் இவர் மாயமானதாக அவரது குடும்பத்தினரும், இஸ்ரேல் தூதரகமும் தெரி வித்திருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. கொலை க்கு காரணம் ஏதும் வெளிவராத நிலையில் இது கொடூர மான யூத எதிர்ப்பு பயங்கரவாதம் என இஸ்ரேல் இனவாத அரசியலை முன்னெடுக்கத் துவங்கிவிட்டது.  2020 இல்  இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஆப்ரகாம் ஒப்பந்தத்திற்கு பிறகு    இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்காக சென்று வருவது குறிப்பிடத்தக்கது.