நியூயார்க்,நவ.25- அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் (US International Development Fin ance Corporation), இலங்கை யில் துறைமுகத்தில் முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் திட்டத்திற்கு கொடுக்க இருந்த 500 மில்லியன் டாலர் கடனை வழங்க லாமா என ஆய்வு செய்து வருவ தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை தலைநகர் கொ ழும்புவில் உள்ள துறைமுகத்தை எடுத்து நடத்துவதற்கான ஒப்பந்த த்தை அதானி குழுமம் முந்தைய அரசுடன் ஏற்படுத்தி இருந்தது. இதற்காக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் அதானி குழுமத்திற்கு கடன் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் பிற உயர் அதி காரிகள் சூரிய மின்சார உற்பத்தி திட்டத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். இதற்காக அமெரிக்க முதலீட்டாளர்கள் பணத்தை அதானி குழுமம் பயன்படுத்தியுள்ளது எனவும் அமெரிக்க பங்குச் சந்தை கண்காணிப்பு ஆணையம் (SEC) குற்றம் சாட்டியது. இந்த லஞ்சம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொ டர்ந்து, அதானி நிறுவனத்திற்கு கடன் கொடுப்பது தொடர்பாக அமெரிக்கா யோசித்து வருவதாக புளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்துடனான இறுதி ஒப்பந்தம் முழுமை அடைய வில்லை. அவர்களின் திட்டங்க ளின் அனைத்து அம்சங்களும் நாங்கள் வைத்துள்ள தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுப்போம். தற்போது அதானி குழுமத்தின் இலங்கை துறைமுக திட்டத்திற்கு கடன் வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என அமெ ரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி கழக மூத்த அதிகாரி ஒருவர் மின் னஞ்சல் வாயிலாக புளூம்பெர்க் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் அதானி குழுமத்திற்கு கடன் வழங்குவதை தாமதித்து வருவதா லும் அக்குழுமத்தின் மீதான குற்றச்சாட்டாலும் சர்வதேச மூல தனம், அதானி குழுமத்தை நோக்கி வருவது குறையும். இந்நிலையில் அதானியின் நிறுவனத்தை பாது காக்க இந்திய வங்கிகளில் உள்ள குடிமக்களின் பணத்தை எடுத்து கடனாக கொடுக்க மோடி அரசு நிர்பந்திக்கும். இதனால் மீண்டும் இந்தி யர்கள் தலையில் பொருளாதார சுமை அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.