மதுரை, நவ. 25 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாந கர் மாவட்டச் செயலாளராக மா.கணேசன் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 24-வது மாநாடு வைத்தியநாதபுரத்தில் தோழர்கள் எஸ். ஞானம், என்.பி. ராமச்சந்திரன் நுழைவுவாயில் தோழர் என். சங்கரய்யா நினை வரங்கில் (மகா மகால்) நவம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப் பினர் சு. வெங்கடேசன் எம்.பி. வாழ்த்திப் பேசினார். தீர்மானங்கள் மதுரையில் இளைஞர் களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கிட புதிய தொழிற்சாலைகளை உரு வாக்க வேண்டும், மென் பொருள் நிறுவனங்களை அதிகப்படுத்த வேண்டும்; மதுரை நகரில், வைகை ஆறு, கிருதுமால் நதி மற்றும் 13 கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும், கால்வாய் களைத் தூர்வார வேண்டும்; மதுரை மாநக ராட்சி குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்; துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணி களிலும் காண்ட்ராக்ட் முறை யை ரத்து செய்திடவேண் டும்; கூடல் நகர் பகுதியில் இரண்டாம் ரயில் முனையம் அமைக்க வேண்டும்; காள வாசல் பாலத்தை அரசரடி முதல் பி.பி. சாவடி வரை இணைத்து புதிய மேம்பாலம் அமைத்திட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; மது ரை மாநகராட்சி நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு பள்ளிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறும் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற் றினார். புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக மா. கணேசன் தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக இரா. விஜயராஜன், அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், ம. பாலசுப்பிர மணியம், அ. கோவிந்த ராஜன், இரா. லெனின், வை. ஸ்டாலின், ஆர். சசிகலா, ஜெ.லெனின், டி. செல்வ ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் நன்றி கூறினார்.