சென்னை, நவ. 25- வங்கக் கடலில் நிலைகொண்டி ருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்களன்று (நவ.25) காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து, சென்னை, கட லூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.25 காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசை யில் தமிழகம் - இலங்கை கடற்கரை யை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. தற்போது நிலை தொடரும் பட்சத்தில், அடுத்து வரும் 5 தினங் களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மை யத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று (நவ.26) மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர் என 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள தயார்: முதல்வர் சென்னையில் அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பருவ மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்திருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்க்கொள்ள அரசு தயாராகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.