நாமக்கல் நவ. 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட் டச் செயலாளராக எஸ்.கந்த சாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட 9-ஆவது மாவட்ட மாநாடு குமாரபாளையத் தில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற்றது. எஸ். தமிழ்மணி, எம்.ஆர். முருகேசன், சந்திரமதி ஆகி யோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி வேலை அறிக்கை முன்வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரியப்பன் மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக எஸ். கந்தசாமி தேர்வு செய் யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஏ. ரங்கசாமி, எம். அசோகன், ந. வேலுச்சாமி, கே. தங்கமணி, எஸ். தமிழ் மணி, சு. சுரேஷ், எம். கணேச பாண்டியன், ஏ.டி. கண்ணன், எம்.ஆர். முருகேசன், ஆர். சந்திரமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் நிறை வுரையாற்றினார். முன்ன தாக மாநாட்டில், கட்சியின் மூத்த தோழர்கள் கௌரவிக் கப்பட்டனர். வரவேற்புக் குழு பொருளாளர் எஸ். கந்தசாமி நன்றி கூறினார். தீர்மானங்கள் நாமக்கல் மாவட்டத்தின் ஜீவ ஆதாரமாக இருப் பது காவிரி நீராகும். இந்நி லையில், சாக்கடை கழிவு நீர், சாய ஆலைகளின் ரசா யன கழிவு நீர் பெருமளவு நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்த கைய மோசமான அழிவை உருவாக்கும் செயலை தடுத்து நிறுத்திட வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களை கட்டமைத்து, செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லி மலை வட்டம் சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு உள்ளிட்ட பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்ற னர். இங்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவ தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து சிரமத்திற்கு மாற்றாக ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தி வந்த குதிரை சாலையை, தார் சாலையாக மாற்றிட வேண்டும். பஞ்சாலைத் தொழி லாளர்களுக்கு அரசு அறி வித்த குறைந்தபட்ச சம்பளம் ரூ. 544 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.