states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தில்லுமுல்லு அரங்கேறியுள்ளது. அதனை திசை திருப்பவே பாஜகவினர் திட்டமிட்டே சம்பல் மாவட்டத்தில் வன்முறையை உருவாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.  டிரம்பிடம் லஞ்ச வழக்கை தீர்க்க மோடியும் அதானியும்  கடுமையான பேரம் நடத்துவார்கள். அதானியின் முறைகேடுகள் தற்போது இந்தியாவின் பாதிப்புகளாக மாறிவிட்டன.

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த வன்முறைக்கு பாஜக அரசாங்கமே நேரடி பொறுப்பு. இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்க பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்துவது மாநிலத்துக்கோ, நாட்டுக்கோ நல்லது அல்ல. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்  விரைவில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

அமெரிக்கா அதானி மீது குற்றம் சாட்டிய சில நாட்களில் கென்யா, வங்கதேசம் போன்ற சிறிய நாடுகள் கூட அதானி நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்யும் போது, அனைத்து சட்டங்களையும் மீறி இந்திய நாட்டை அதானிக்கு விற்கும் அளவுக்கு மோடி அவர்களுக்கு என்ன  நெருக்கம்?

“லஞ்சக் குற்றச்சாட்டுகள் தீரும் வரை அதானி நிறுவனத்தில் புதிய முதலீடு எதுவும் இல்லை”  என பிரான்சின் டோட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொல்லூர் அருகே உள்ள ஜட்கல் பகுதியில் “காந்தாரா - 2” திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர்கள் குழு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. 20 பேர் பேருந்தில் இருந்த நிலை யில், 6   பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் (பம்பே குழு) இரண்டு உறுப்பி னர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய அரசு அமைப்ப தற்கான சூத்திரத்தை இறுதிசெய்வது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே விவாதங்கள் நடை பெற்று வருகிறது” என மகாராஷ்டிர துணை முதல்வ ரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திங்களன்று அதிகாலை  கார் - பேருந்து மோதிய பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம் பேட்டையில் இஎம்ஐ கட்டாவிட்டால் பைக்கை எடுத்து சென்றுவிடுவோம் என்று மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள் கண்முன்னே வாலிபர் அந்த பைக்கை தீ வைத்து எரித்தார். 

“அதானி, மணிப்பூர், வக்பு மசோதாவை நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பும்” என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கூறினார். 

சம்பல் வன்முறை குறித்து நீதி விசாரணை கோரி உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் லக்னோ வில் திங்கள்கிழமை “மவுனப் போராட்டம்” நடத்தினர்.