states

img

சிபிஎம் மணிப்பூர் மாநில மாநாடு மாநிலச் செயலாளராக சேத்ரிமயூம் சன்டா தேர்வு

இம்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிப்பூர் மாநில 20ஆவது மாநாடு இம்பால் நகரில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் நவம்பர் 16 அன்று நடைபெற்றது. சுதந்திரப் போ ராட்ட வீரரும், கட்சியின் முதுபெரும் தலைவருமான 101 வயதான தோழர் நிந்தௌஜம் தோம்பா, முழக்கங்களு க்கு மத்தியில் செங்கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். விஜூ கிருஷ்ணன் பங்கேற்பு அதன்பிறகு அனைத்து பிரதிநிதி களும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். சரத் சலாம் அஞ்சலி தீர்மா னத்தை முன்வைத்தார். மாநாடு தலை மைக் குழுவில் சைகோம் ஜுகோல், நோங்மைதேம் தோய்பா சிங் மற்றும் தௌனாஜம் சரத் ஆகியோர் இடம் பெற்றனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பிரதிநிதி கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநிலச் செயலாளர் சேத்ரிமயூம் சன்டா வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை முன்வைத் தார். 11 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றனர். அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மத்தியக் குழு உறுப்பினரும், மணிப்பூர் பொ றுப்பாளருமான சுப்ரகாஷ் தலுக்தார் கட்சியின் முன்னுள்ள பணிகள் மற்றும் முன்னுரிமைப் பணிகள் குறித்து பேசினார். மாநிலக் குழு தேர்வு தொடர்ந்து 16 பேர் கொண்ட மாநி லக் குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டது. சேத்ரி மயூம் சன்டா மீண்டும் மணிப்பூர் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகள் இருந்த போதி லும், பிரதிநிதிகள் மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாநாட் டில் பங்கேற்ற 52 பிரதிநிதிகளில் 11 பெண்கள் ஆவர். குறிப்பாக 20 வய தான சதீகா இளம் பிரதிநிதியாகவும், 101 வயதான நிந்தௌஜம் தோம்பா மூத்த பிரதிநிதியாகவும் பங்கேற்ற னர். தீர்மானம் மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்க தவறிய ஒன்றிய மற்றும்  மாநில பாஜக அரசுகளைக் கண்டித் தும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த 4  பேர் கொண்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர் இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மணிப்பூரின் சில பகுதிகளில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) மீண்டும் அமல்படுத்துவதை எதிர்த்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.