world

img

அரபிக் கடலில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

நவம்பர்.29- 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த இந்திய - இலங்கை கடற்படையினர். 
அரபிக் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து 2 படகுகளில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை மடக்கிப்பிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.