கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் (88), இன்று காலமானார்.
சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், ரோம் நேரப்படி காலை 7:35 மணிக்கு அளவில் அவர் காலமானார். அவரது உடல் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்:
போப் ஃபிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ். ஏழை, எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது அன்பு காட்டி அரவணைத்தவர். அவரது மறைவால் மிகுந்த வருத்தமடைந்தேன்.
சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்னும் செய்தி துயரம் மிகுந்தது.
"கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவது பாவச்செயல் அல்ல” என்ற கூறிய போப், அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றின் மேல் கட்டப்பட்ட இறை நம்பிக்கையின் உலக அடையாளங்களில் ஒருவராக விளங்கினார். போப் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி இரங்கல்!
தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ஆண்டவரான, கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.