states

img

ஆர்எஸ்எஸ் கட்டளையின் படி செயல்படும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்

ஆர்எஸ்எஸ்  கட்டளையின் படி செயல்படும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்

சிபிஎம்  மேற்கு வங்க  மாநிலச் செயலாளர் முகமது சலீம் குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப். 21- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு ஏற்பாட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அரசி யல் தலைமைக் குழு உறுப்பினருமான முகமது சலீம் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக வெளிப் படையாக எதிர்ப்பைக் காட்டிக் கொண்டு மோதி னாலும், உண்மையில் இரண்டும் ஆர்எஸ்எஸ் ஸின் கட்டளைப்படி தான் செயல்படுகின்றன. அதாவது மேற்கு வங்கத்தில் ஒன்றிய - மாநில  அரசுகள் ஒருவருக்கொருவர் நாடகம் நடத்து கின்றன. ஆனால் இவற்றின் திரைக்கதை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் எழுதுகிறார். அவர் சமீபத்தில் வந்து திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஒற்றுமையை சீர்குலைக்கும் திட்டம்  மாநிலத்தில் இந்தி சினிமா உரையாடலைப் போல, இரு கட்சிகளும் ஒரே விளையாட்டை (மத மோதல்) விளையாடுகின்றன. திரிணா முல் - பாஜகவினர் முர்ஷிதாபாத்தில் ஜும்ஆ  தொழுகை முதல் ஹனுமான் பூஜை வரை எல்லா வற்றையும் மக்களை பிளவுபடுத்த பயன் படுத்துகின்றனர். இது தொழிலாளர் வர்க் கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் திட்டம் ஆகும். மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்படுள்ளன. தொழிலாளர் கள், விவசாயிகள், குடிசைவாசிகள், புலம் பெயர்ந்தோர் என யாருக்கும் வேலை அல்லது சமூக பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொ ருட்களின் விலைவாசி ‘சந்திரனின் சந்தை’ வரை (விண்ணை முட்டும் அளவு) உயர்ந்துள்ளது. கிண்டல் செய்தவர்கள் காணட்டும் இந்த வெயில் கால நேரத்தில் பிரிகேட் மைதானத்தில் சிபிஎம் கூட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என பலரும் கிண்டல் செய் தார்கள். ஆனால் அப்படிச் சொன்னவர்கள் கூட்டத்தின் பிரம்மாண்டத்தை பார்க்கட்டும். லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க பிரிகேட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள். ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக நள்ளிரவில் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதன் மூலம், மாநிலத்தில் தற்போது நிலைமை மாறி  வருவதை வெளிப்படுத்தியுள்ளது.  குறிப்பாக ஒரு காலத்தில் மேதினிபூரில் ‘சிவப்புக் கொடி இருக்காது’ என்று சொன்னாரோ  (பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி), அவரே இன்று திரிணாமுல் கொடியை கிழித்தெ றிந்து அமித் ஷாவின் பின்னால் அமர்ந்துள்ளார். பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு பழைய மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் தான் சந்தர்ப்பவாதத்திற்காக கட்சி மாறியுள்ளார். போராட்டம் ஆரம்பம் இது வெறும் பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இது ஒரு புதிய போராட்டத்தின் ஆரம்பம். நாங்கள் போராட்டத்தின் தொடக்க இடத்தி ற்கு வந்துள்ளோம். இங்கே போராட்டம் முடி வடையவில்லை. இன்று முதல் போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய - மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கும், பொதுமக்களின் உரிமை களுக்குமானது ஆகும்” என கூறினார்.