states

img

வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக இந்துத்துவா குண்டர்கள் அவதூறு

வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக  இந்துத்துவா குண்டர்கள் அவதூறு

நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்

இந்தியா - பாகிஸ்தான் போர்  பதற்றத்தில் முக்கிய முக மாக இருந்தவர் வெளியுற வுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி  (60). மே 8 முதல் 72 மணிநேரம்  இடைவிடாமல் போர் தொடர்பான  அப்டேட், பத்திரிகையாளர் சந் திப்பு, போர் நிறுத்த அறிவிப்புகள் என அனைத்தையும் செய்தவர்.  பாகிஸ்தான் தாக்குதல் நடத் திய போது பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங், வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர் ஆகியோர் இல்லாத  நேரத்தில் இந்திய - பாகிஸ்தான்  போர் பதற்றம் தொடர்பாகவும், ராணுவ நிலை, மாநிலங்களுக்கு எச்சரிக்கை உள்ளிட்ட தகவல் களை அடிக்கடி வெளியிட்டவர் விக்ரம் மிஸ்ரி தான். இந்நிலையில், விக்ரம் மிஸ் ரிக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச்  சேர்ந்த குண்டர்கள் சமூக வலைத்  தளங்களில் ஆபாச வார்த்தைகளு டன் அவதூறு பரப்பி வருகின்ற னர். இந்திய - பாகிஸ்தான் போர்  முடிவுக்கு வந்ததன் காரணமாகவே  விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக இந்  துத்துவா குண்டர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர் என கூறப்படு கிறது. இது ஒரு விஷயம் என்றா லும், இன்னும் 2 விஷயங்களுக்காக  சேர்த்து தான் இந்துத்துவா குண் டர்கள் விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 காரணங்கள்  1 பாகிஸ்தானை அழிக்காமல் ஏன்  போரை நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பி அவதூறு. 2 போர் நிறுத்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை? என விஷமப் பிரச்சாரம் 3 இறுதியாக விக்ரம் மிஸ்ரியின் மகள் டிடன் மிஸ்ரி ரோஹிங்கியா (மியான்மர் முஸ்லிம் பழங்குடி மக்கள்) அகதிகளுக்கு சட்ட  உதவி வழங்கியது தெரியவந்த தால் இந்துத்துவா குண்டர்கள் தொடர்ச்சியாக விக்ரம் மிஸ்ரி மற் றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்ரம் மிஸ்ரிக்கு  ஐஏஎஸ் சங்கம் ஆதரவு விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக இந்  துத்துவா குண்டர்கள் அவதூறு பரப்பி வரும் சூழலில், அவருக்கு  நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலை யில், விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது  குடும்பத்தினருடன் பக்க பலமாக  இருப்போம் என்று கூறிய ஐஏஎஸ்  சங்கம், அரசு ஊழியர்கள் தங்கள்  கடமைகளை நேர்மையுடன் செய்த தற்காக விமர்சிக்கப்படக்கூடாது என்று தெரிவித்தனர். இது தொடர்  பாக ஐஏஎஸ் சங்கம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”ஐஏஎஸ் சங்கம் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பக்க பலமாக  நிற்கிறது. நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது இதுபோல முன்வைக்கப்பட்ட தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் வருந்தத்தக்கவை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.  அதேபோல ஐஆர்டிஎஸ் சங்கம்  மற்றும் ஐஆர்எஸ் (சி&ஐடி) சங்க மும் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவ ரது குடும்பத்தினர் மீது வைக்கப்  பட்ட மோசமான விமர்சனங்களைக்  கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐஆர்டிஎஸ் சங்கம் தனது டுவிட் டர் எக்ஸ் பக்கத்தில்,”விக்ரம் மிஸ்ரி  மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான தேவையற்ற விமர்சனங் கள் மற்றும் தனிப்பட்ட தாக்கு தல்களை வன்மையாகக் கண்டிக்கி றோம். அவரது சேவை மற்றும் தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்க ளிப்புகளை அங்கீகரித்து, அனை வரும் மரியாதை மற்றும் கண்ணி யத்தைக் கடைப்பிடிக்க வேண்  டும்” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. ஐஆர்எஸ் (சி&ஐடி) சங்கம்,” விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்  களை வன்மையாகக் கண்டிக்கி றோம். அவருக்கு முழு ஆதரவை அளிப்போம்” என கூறியுள்ளது. இந்துத்துவா குண்டர்களின் ஆபாச அவதூறுகளால் விக்ரம் மிஸ்ரி தனது சமூகவலைதள பக்  கத்தை மூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவுத் துறையில்  36 வருட அனுபவம் கொண்டவர்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1964ஆம் ஆண்டு பிறந்த விக்ரம்  மிஸ்ரி 1989ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள  பல்வேறு நாடுகளின் இந்திய தூதரகங்களில் பணி புரிந்த பின்பு,  ஜூலை 15, 2024 அன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாள ராகப் பொறுப்பேற்றார். பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்க ளைக் கையாளும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் குழுவிலும்  பணியாற்றியுள்ளார். குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்  சர்களாக இருந்த ஐ.கே.குஜ்ரால் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகி யோரின் குழுக்களிலும் விக்ரம் மிஸ்ரி இடம் பெற்றிருந்தார். பிர தமர் அலுவலகத்திலும் விக்ரம் மிஸ்ரி இணைச் செயலாளராகப் பணி யாற்றியுள்ளார். ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், மோடி ஆகிய மூன்று இந்தி யப் பிரதமர்களின் தனிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மொத்தம் 36 வருட அனுபவம் கொண்ட விக்ரம் மிஸ்ரி மீது வெறுப்பு  அரசியலுக்கு ஆதரவாக இந்துத்துவா குண்டர்கள் விஷமப் பிரச்சா ரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் மக்களுக்கு உதவியதால்  டிடன் மிஸ்ரி மீது வெறுப்புப் பிரச்சாரம்

விக்ரம் மிஸ்ரியின் மகள்  டிடன் மிஸ்ரி இங்கி லாந்து நாட்டின் லண்டனில் தங்கி, உலகளாவிய சட்ட நிறு வனமான ஹெர்பர்ட் ஸ்மித் ப்ரீஹில்ஸ் (Herbert Smith Freehills) இல் பணிபுரிகிறார். மேலும் முதலீட்டு ஒப்பந்தங் கள் மற்றும் சர்வதேச வணிக  நடுவர் முறைகள் (Investment  Treaty & International Commercial Arbitration) பிரிவிலும் பணியாற்றுகிறார். டிடன் மிஸ்ரி இந்திய அரசுக்கு பல சர்வதேச நடுவர் வழக்கு களில் (international arbitration) ஆலோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக மியான்மர் அகதிகளான ரோஹிங்கியா முஸ்லிம் மக்க ளுக்கு சட்டரீதியான ஆதரவு  வழங்கியுள்ளார். ரோஹிங் கியா முஸ்லிம் மக்களுக்கு ஆத ரவு வழங்கியதால் தான்  விக்ரம்  மிஸ்ரியின் மகள் டிடன் மிஸ்ரி  மீதும் இந்துத்துவா குண்டர்கள்  அவதூறு பரப்பி வருகின்ற னர்.