ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி
விக்ரம் மிஸ்ரி ஒரு கண்ணியமான, நேர்மையான மற்றும் தேசத்திற்காக அயராது உழைக்கும் ராஜதந்திரி. நம் நாட்டின் அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நிர்வாகக் குழு அல்லது அரசியல் தலைமைகளுக்கு கீழ் எடுக்கப்படும் எந்த முடிவுகளுக்கும் அரசு ஊழியர்களை குற்றம் சாட்டக்கூடாது.
சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத்
ம்லா ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் மட்டுமே. எந்த மூன்றாவது நாட்டிற்கும் இதில் தலையிட உரிமை கிடையாது. அப்படி இருக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு யார் உரிமை கொடுத்தது?. நமது அரசியல் தலைமை பலவீனமாக இருந்தாலும், நமது ராணுவத் தலைமை பலமாக உள்ளது.
முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா மேனன் ராவ்
அர்பணிப்புள்ள ராஜதந்திரியான விக்ரம் மிஸ்ரி இந்தியாவிற்கு தொழில்முறை மற்றும் உறுதியுடன் சேவை செய்துள்ளார். அதற்கு அவரையும், அவரது மகளையும் இழிவுபடுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த நச்சு வெறுப்பு நிறுத்தப்பட வேண்டும். நமது ராஜதந்திரிகளுக்கு பின்னால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ட்ரோல் செய்பவர்களை கிழித்து எறிய வேண்டும்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
அமெரிக்காவுக்கு இந்தியாவில் என்ன வேலை? அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததை ஒன்றிய அரசு ஏற்றதன் காரணம் என்ன? அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது மிகப்பெரிய தவறு.