நிறுவனமயமாக்கலுக்கு எதிராக நின்ற போப் - எம்.ஏ.பேபி
கத்தோலிக்க திருச்சபையின் தலை வராக இருந்தபோதும், முழு உல கிற்கும் ஒரு ஆன்மீக குருவாக மறைந்த போப் பிரான்சிஸ் விளங்கினார். கத்தோ லிக்க திருச்சபையின் நிறுவனமயமாக்கலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நிலைப்பாடுகளை எடுத்த ஒரு சிறந்த ஆளுமை அவர். ஆனால், அத்தகைய தலையீடுகள் கத்தோ லிக்க திருச்சபையின் தலைமையில் ஒரு தீவிர மாற்றத் திற்கு வழிவகுத்தன என்று கூற முடியாது. ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கல் பாவம்... கத்தோலிக்க திருச்சபையின் கடுமையான கட்டமைப் பிற்குள்ளும் கூட, திருநங்கைகளின் மனித உரிமைகள் குறித்த போப் பிரான்சிஸின் அணுகுமுறை மிகவும் துணிச்ச லானது. ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் என்ற நிலைப்பாட்டை போப் பிரான்சிஸ் நிராகரித்தார். ஜனவரி 2023 இல் அசோ சியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், ஓரினச் சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்குவது “அநீதி” என்று போப் கூறினார். அதற்கடுத்த மாதம் செய்தியாளர்களி டம் பேசிய அவர், “ஓரினச்சேர்க்கையை குற்றவாளியாக்கு வது பாவம்” என்றார். கத்தோலிக்க திருச்சபையின் உச்சத் தலைவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது நினைத்துப் பார்க்க முடி யாதது. கடவுள் தொடர்பாக அவர் இந்த விளக்கங்களை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “ஓரினச்சேர்க்கை போக்குகளைக் கொண்டவர்களும் கடவுளின் குழந்தை கள்.” கடவுள் அவர்களை நேசிக்கிறார். கடவுள் அவர்களுடன் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களைக் கண்டனம் செய்வது பாவம். “ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கு வது நியாயமற்றது” என்று அவர் கூறினார். ஆணாதிக்கத்துக்கு எதிராக... வரலாற்றில் முதல் முறையாக வாட்டிகன் நகர ஆளுந ராக ஒரு கன்னியாஸ்திரியை நியமித்த போப் பிரான்சிஸின் முடிவு, மதங்களில் பொதுவாகக் காணப்படும் ஆணா திக்கப் போக்குகளுக்கு எதிரான ஒரு போராட்டமாகக் கருதப்பட்டது. வாட்டிகனின் ஆளுநராகப் பணியாற்றி வந்த கார்டினல் பெர்னாண்டோ வெர்காஸ் அல்சாகா, 80 வயதை எட்டியதால், அந்தப் பதவியிடம் காலியானது அப்போது, அந்தப் பதவிக்கு சகோதரி ரபேலா பெட்ரினியை போப் பிரான்சிஸ் நியமித்தார். போப்பின் இந்த நியமனம் கத்தோ லிக்க திருச்சபையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவ தற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய துணிச்சலான அறிவிப்பா கவும் இருந்தது. ஊடகங்கள் பற்றி... சமூகத்தில் இருந்த ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு பெரும்பாலும் போப்பின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. “சந்தையில் உணவுப் பொருட்களின் விலை யில் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கங்கள் அச்சு மற்றும் ஒளி பரப்பு ஊடகங்களில் பெரிய செய்தியாக மாறினாலும், பசி யால் தெருவில் இறக்கும் ஒரு மனிதனைப் பற்றி ஊடகங்கள் குறிப்பிடுவதில்லை” என்று கூறி, அம்பலப்படுத்திய அவரது அப்போஸ்தலிக்க அறிக்கை உலகம் முழுவதும் பரவ லாக விவாதிக்கப்பட்டது. சமநிலைச் சமூகத்தை உருவாக்க... முதலாளித்துவ அமைப்பு சமத்துவமின்மையை நிலை நிறுத்துகிறது, ஏழைகளை மேலும் புறக்கணிக்கிறது என்ற அவரது நிலைப்பாடு குறிப்பிடத்தக்கது. இலாபத்தை விட மனித கண்ணியத்தை மதிக்கும் ஒரு பொருளாதார ஒழுங்கின் அவசியம் குறித்து போப் பிரான்சிஸ் பேசி யுள்ளார். மிகவும் சமநிலையான சமூகத்தை உருவாக்க பொருளாதார அமைப்புகளில் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என்ற அவரது கருத்து குறிப்பிடத்தக்கது. சுரண்டல் அமைப்பு லட்சக்கணக்கான மனித உயிர் களை எவ்வாறு துயரத்திற்குள்ளாக்குகிறது என்பதற்கான அவரது மதிப்பீடு லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறை யியலின் செல்வாக்கின் ஒரு எடுத்துக் காட்டாகக் கருதப்பட்டது. இருப்பினும், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் கார்டினலாக இருந்த காலத்தில் அவர் விடுதலை இறையியல் இயக்கத்து டன் போதுமான தொடர்பைப் பேண வில்லை என்ற விமர்சனம் உள்ளது. போர்களுக்கு எதிராக... பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள், போர்களால் ஏற்ப டும் பேரழிவுகள் அனைத்தையும் போப் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரா னது என்று கூறும் போர் குறித்த போப் பிரான்சிஸின் விமர்சனம், அமெரிக்க ஏகா திபத்தியம், அதன் போர் தந்திரோபாயங் கள், இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மரண இயந்திரம் ஆகியவற்றை நோக்கியதாக இருந்தது. பிறமதங்களுடன் உரையாடல் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக போப் பிரான்சிஸ் மிகவும் வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தப் பூமி ‘நமது பொதுவான வீடு’ என்ற கருத்தை விரிவு படுத்தும் ஒரு அப்போஸ்தலிக்க அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார். பல்வேறு மதங்களுடன் உரையாட லில் ஈடுபடுவதில் அவர் சிறப்பு ஆர்வம் காட்டினார். அவர் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுடன் விவாதங்களை நடத்தி உள்ளார், மேலும் ஸ்ரீ நாராயண குருவின் தரிசனங்களைப் பற்றி கூட பேசியுள்ளார். உலக அமைதியை உறுதி செய் வதற்கான அடிப்படை கூறுகளில் ஒன்றாக இதுபோன்ற விவாதங்களை அவர் கண்டார். முதலாளித்துவத்துக்கு எதிராக... நவீன வரலாற்றில் வேறு எந்த மதத் தலைவரும் தான் வாழ்ந்த காலத்திற்கும் உலகிற்கும் இவ்வளவு தீவிரமாக வும் அச்சமின்றியும் பதிலளித்ததில்லை. அதனால்தான் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், சிபிஐ(எம்)-இன் ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் ‘போப் முதலாளித்துவத்திற்கு எதிராக’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளி யிட்டார். இந்த எழுத்தாளர் ‘சிந்தா’ என்ற வார இதழில் போப் பிரான்சிஸின் வரவேற்கத்தக்க நிலைப்பாடுகளைப் பற்றியும் எழுதினார். அநீதியான போர்கள், படுகொலைகள் மற்றும் இரத்தக் களரிகளால் பிளவுபட்ட உலகில் மனிதநேயம், சகவாழ்வு மற்றும் சமூக நீதிக்காக குரல் எழுப்பும் சிறந்த ஆளுமை கள் அருகி வருகிறார்கள். அதனால்தான் போப் பிரான்சிஸின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் சகோதரத்துவம், சமத்துவம், நீதியை அடித்தள மாக கொண்ட ஒரு உலகைப் படைக்க விழைவோருக்கு அவரது நினைவுகள் ஊக்கமளிக்கும்.