திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா
பாஜகவின் ஆதரவாளர்கள் நீதித்துறையை திட்டிக் கொண்டிருப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பிட்புல் என்ற நாய் தனது எஜமானரின் கட்டளை இல்லாமல் எதுவும் செய்யாது. இந்தியாவை ஆளும் முரட்டு மூடர்கள் அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. வாக்களிக்கப்பட்ட காணொலித் தரவுகளை கேட்டோம். அவற்றைத் தர மறுத்தது மட்டுமின்றி, வாக்குச்சாவடி காணொலிகளை எவரும் கேட்க முடியாத படி சட்டத்தையும் பாஜக அரசு திருத்தி இருக்கிறது.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்
சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு அமைப்புகளை பாதிக்கும் பாஜகவின் செயல்பாடுகளால் நம் குடியரசு நொறுங்கி வீழும் நிலையில் இருக்கிறது. அதை உச்சநீதிமன்றம்தான் தடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பாஜகவினர் கடும் கோபத்துடன் உச்சநீதிமன்றத்தை விமர்சித்து வருகின்றனர்.
எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ்
மேற்கு வங்கத்தில் போராடும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடதுசாரி அமைப்புகள் மக்களின் சக்தியை நிரூபித்தன. இதனால் பிரிகேட் மைதானத்தில் சிவப்பு அலை வீசியது. அதே போன்று கொல்கத்தா நகரமும் செங்கடலாக மாறியது.