மேற்கு வங்க மாநிலத்தில் “ஜனநாயகத்தை அழிக்கும் யாகம்” நடக்கிறது
விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அமல் ஹால்டர் பேச்சு
தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அமல் ஹால்டர் பேசுகையில்,”மேற்கு வங்கம் முழுவதும் “ஜனநாயகத்தை அழிக்கும் யாகம்” நடந்து வருகிறது. பொதுமக்களின் உரிமைகள் மட்டுப் படுத்தப்படுகின்றன ; எதிர்க்கட்சிகளின் குரல் அடக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசின் கீழ் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த மேற்கு வங்கம், தற்போது தெலுங்கானாவுக்கு பின்னால் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டன மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயி களின் மேம்பாட்டிற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படை யாகக் கொண்ட எந்த நவீன திட்டமும் திரிணாமுல் காங்கிரஸ் அரசிடம் இல்லை. நீர்ப்பாசன வசதிகளை வழங்கவோ, மேம்படுத்தப்பட்ட விதை களை வழங்கவோ அல்லது பயிர்க ளைப் பாதுகாக்கவோ ஒருங்கிணைந்த முயற்சி எதுவும் இல்லை. மாறாக, விவசாயிகள் கடன் பொறியில் தள்ளப்பட்டு மேலும் ஆபத்தில் சிக்கி யுள்ளனர். மேற்கு வங்க முதலமைச்ச ரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவ ருமான மம்தா பானர்ஜி அளித்த வாக்கு றுதிகள் பொய்யாகிவிட்டன. மேற்கு வங்க மாநில அரசின் செயல் பாடு இவ்வாறு உள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசோ பெரு முதலாளிக ளின் நலனுக்காக மட்டுமே வேலை செய்கிறது. புதிய விவசாயச் சட்டங்கள், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உரிமையை கைப்பற்ற ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சிக் கின்றன. கொள்ளையடிக்க வரும் அமெரிக்க துணை ஜனாதிபதி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வருகையின் முக்கிய நோக்கம், அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியச் சந்தையில் தடையின்றி விற்பனை செய்வதற்கான வழியைத் திறப்பதாகும். இது இந்திய விவசாயிகளு க்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். தேசிய அளவில் ேலைநிறுத்தம் அதே போன்று நாட்டைக் காப்பாற்ற, நாட்டின் வளங்களை பாதுகாக்க மே 20ஆம் தேதி தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடத்தப்படும். இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண் டும். தேபாகா இயக்கம் (1946–1947 ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தால் வங்காளத்தில் தொடங்கப் பட்ட விவசாயிகள் போராட்ட அமைப்பு) விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல, வகுப்புவாத சக்தி களை எதிர்ப்பதற்கான போராட்டமும் கூட. இந்த இயக்கம் கலவரங்களைத் தடுத்தது போலவே, இன்றைய மக்கள் இயக்கம் வகுப்புவாதப் பிரிவினையின் சதியை முறியடித்து வங்கத்தின் மையப் பகுதியில் விடுதலையின் புதிய விடி யலை ஏற்படுத்த வேண்டும். அதனால் ஜனநாயகத்தின் நெருக்கடி, விவசாயத் துறையின் சீரழிவு மற்றும் வரவிருக்கும் தேசிய போராட்டத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்தார்.