world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சர்வதேச அளவில் தங்கம் விலை  வரலாறு காணாத உயர்வு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரந்துள்ளது. விலை மதிப்புள்ள உலோகங்களை அளவிடப்படும் டிராய் அவுன்ஸ் மதிப்பில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.1035 கிராம்) தங்கம் சுமார் 3,400 டாலர்க ளாக விற்பனையாகியுள்ளது. இது முந்தைய விலையை விட 2 சதவீதம் அதிக மாகும். சர்வதேச பொருளாதார சூழலின்   நிச்சயமற்ற தன்மை, வர்த்தகத்திற்கான டாலர் பற்றாக் குறை போன்ற காரணத்தால் உலக நாடுகள் அதிகளவிலான தங்கத்தை தொடர்ந்து இறக்குமதி செய்கின்றன.  

3டி தொழில் நுட்பத்தில்  ரயில் நிலையம் கட்டமைப்பு  

ஜப்பானின் அரிடா நகரில் அந்நாட்டின் மேற்கு இரயில்வே நிறுவனம் 3டி தொழில் நுட்பம் மூலம் ரயில் நிலையத்தை கட்டி எழுப்பியுள்ளது. இது அந்நாட்டின் தொழில்நுட்பம் ரயில்வே துறையின் உள்கட்டமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றை காட்டுவதாக அறிவியலாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.  தினந்தோறும் 530 பயணி கள் வந்து செல்கின்ற இந்த ரயில் நிலை யத்தை 3டி தொழில் நுட்பம் மூலமாக கட்டு வதற்கு  6 மணி நேரம் ஆனது என தெரிவித்துள்ளனர். 

உலகில் முதல் 10ஜி சேவையை அறிமுகப்படுத்திய சீனா

பெய்ஜிங்,ஏப்.21-  உலகிலேயே முதல் முறையாக அதிவேக மான 10ஜி இணைய சேவையை சீன அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த 10ஜி தொழில் நுட்பம் மூலமாக 3 மில்லி நொடிகளில் 9,834 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும் என்றும் 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2025 ஜனவரி மாதம் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) 10ஜி இணைய சேவையை உருவாக்கும் திட்டத்தை துவங்கும் அறிவிப்பை வெளியிட்டது.   இந்த சேவை சோதனை முறையில் ஹெபே மாகாணத்தில் உள்ள சுனான் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகளா விய இணைய உள்கட்டமைப்பில் ஒரு அசுர வளர்ச்சி என கூறப்படுகின்றது. சீன நிறுவனமான ஹுவெய் ( huwaei ) மற்றும் சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளன.  சீனா மீது சுமார் 145 சதவீதம் வரை அமெரிக்கா வரிவிதித்துள்ள நிலையில் இந்த அசுர வளர்ச்சி  உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப் சீனா மீது அதிக வரிகளை விதித்த போது பைடன் நிர்வாகம் செய்யும் அதே தவறையே டிரம்ப்பும் செய்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.  சீனாவின் வளர்ச்சியை முடக்குவதற்காக பைடன் நிர்வாகம் 2024 இறுதியில் சீனாவின் சிப் உற்பத்தி நிறுவனங்கள் மீதும் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் மீதும் தடை விதித்தது. இதனை போட்டியாக எடுத்து கொண்ட சீனா, சிப் உற்பதியில் பிரம்மாண்ட வளர்ச்சியை நோக்கி சென்றது. குறிப்பாக சீனாவின் சிறிய ஸ்டார்ட் அப் நிறு வனம் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை வெளியிட்டு அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை ஆட்டம் காணச் செய்தது.  தற்போதும் அதே போல இணைய சேவை யில் சீனா புதிய மைல்கல்லை நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த ஆண்டின் இறுதிக்குள் தேவையான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு முக்கிய  நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவை திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக பொது மக்கள், தொழிற்சாலைகள், தொழில் துறை பூங்காக்கள் உள்ள முக்கிய பகுதிகளை இலக்கா கக் கொண்டு அமல்படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.