கிரீஸில் நாடு தழுவிய அளவில் கல்வி வளாகங்களில் நடந்த மாணவர் தேர்தல்களில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக அனைத்து மாணவர் ஒத்துழைப்பு இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான, கிரீஸ் இடதுசாரி இளைஞர்கள் அமைப்பின் ஆதரவுடன் போட்டியிட்ட அனைத்து மாணவர் ஒத்துழைப்பு இயக்கம் 33.64% வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளது.