world

img

டெல்டா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்  

டெல்டா கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் உருமாறிய வைரசான டெல்டா வைரஸ், முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டது. இப்போது அது உலகின் சுமார் 150 நாடுகளுக்குப் பரவி விட்டது. இந்நிலையில் இந்த டெல்டா கொரோனா தொற்று குறித்து இங்கிலாந்து பொதுச் சுகாதாரத்துறையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது.  இந்த முடிவுகள், தி லேன்செட் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

அதில், டெல்டா வைரஸ் அதிகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளதாகவும். ஆல்பா கொரோனா வைரசுடன் ஒப்பிடும்போது, டெல்டா கொரோனா வைரசால் மருத்துவமனைகளில் சேர்க்கும் ஆபத்து அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் டெல்டா வைரசால் பாதிக்கப்படுவது, சுகாதார பராமரிப்பு சேவைக்கு மிகப்பெரிய சுமையாக அமையும் எனவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.