17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசருக்காக உருவாக்கப்பட்ட மரகதம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட கண்ணாடிகள் ஏலத்திற்கு விடப்பட இருக்கின்றன.
லண்டன் – வைரம் மற்றும் மரகத லென்ஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஜோடி முகலாயர்கள் காலக் கண்ணாடிகள் லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றன.
இதில் கேட் ஆப் பாரடைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ஜோடி கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களில் மரகத்தால் ஆன லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹலோ ஆப் லைட் என்று அழைக்கப்படும் 2-வது கண்ணாடி, வைரத்தால் ஆன பிரேம்களில் வைர லென்ஸ்கள் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த லென்ஸ்கள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் பிரேம்கள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகள் என்றும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடிகள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசருக்காக உருவாக்கப்பட்டதாகவும் இந்த மரகதங்கள் கொலம்பியாவிலிருந்து போர்ச்சுகீசிய வணிகக் கப்பல்கள் மூலம் வந்தவை என்றும் வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களிலிருந்து வந்தவை என்றும் கூறப்படுகின்றன.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ஒவ்வொரு கண்ணாடியும் சுமார் 27 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.