வாஷிங்டன்,ஜன.23- அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு எதி ராக லட்சக்கணக்கில் மக்களை திரட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என ஸ்டாப் டிரம்ப் கூட்டணி போராட்டக்குரல் எழுப்பியுள்ளது. தொழிற்சங்க தலைவர்கள், காலநிலை ஆர்வ லர்களை உள்ளடக்கி செயல்படும் ஸ்டாப் டிரம்ப் கூட்டணி, டிரம்ப் பதவியேற்ற அன்று இவ்வாறு அறிவித்துள்ளது. உலகளவில் தீவிரமாகி வரும் போர்ச் சூழல், அதிகரித்து வரும் சர்வாதிகாரம், பெருநிறுவனங்க ளின் சுரண்டல்கள், ஆதிக்கம், காலநிலை மாற்றம் ஆகியவை என மிக ஆபத்தான சுனாமி போன்ற ஒரு சூழலுக்கு இடையே பில்லியன் டாலர் கோடீஸ்வ ரரான டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் என சர்வதேச பொது மன்னிப்பு சபை (அம்னஸ்டி இன்டர் நேஷனல்) எச்சரிக்கை விடுத்திருந்த அதே நேரத் தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டு வரும் ‘ஸ்டாப் டிரம்ப்’ குழுவினர் 2017 மற்றும் 2018களில் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற போது டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்க ளை நடத்தினர். ஸ்டாப் டிரம்ப் கூட்டமைப்பின் செய்தித் தொடர் பாளர் ஜோ கார்ட்னர் தெரிவித்ததாவது: இனி வரும் வாரங்களில், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந் தோர் மற்றும் சிறுபான்மையினர் மீதான பயங்க ரமான தாக்குதல்களை நாம் பார்க்க முடியும். 2017 இல் டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில் இனவெறி யுடன் முஸ்லிம்களை டிரம்ப் நடத்திய விதத்தை போலவே இதுவும் இருக்கும் என கூறினார். டிரம்ப்பின் கொள்கைகளுக்கும் இங்கிலாந் தில் புதிதாக உருவாகியுள்ள தீவிர வலதுசாரிகளுக் கும் (ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி) எதி ராக ஒரு ஒருங்கிணைத்த எதிர்ப்பை கட்டமைக்க ஒரு பரந்த, ஜனநாயகக் கூட்டணி இருப்பது அவசியம் என ஸ்டாப் டிரம்ப் அமைப்பினர் கருதுகின்றனர். இருண்ட பக்கம் டிரம்ப்பின் பதவி ஏற்பு ஒரு இருண்ட பக்கம் எனவும் அவர்கள் தீவிர வலதுசாரி தடத்தை நோக்கி நகர்கின்றன எனவும் அவ்வமைப்பு விமர்சித்துள் ளது. மேலும் டிரம்ப், எலான் மஸ்க், நைஜல் ஃபரேஜ், இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேடிவ் கட்சித்தலை வர் கெமி படேனோக் போன்ற வலதுசாரிகள் அனை வரும் “நமது அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் தோல்வியின் அறிகுறிகள்” என கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போது டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஆயிரக்கணக்கில் லட்சக்கணக் கில் மக்களை அணிதிரட்டுவதன் அடிப்படையில் சமூக உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து வலுப் படுத்துவதற்கான ஒரு அடிப்படை முயற்சியாகவும் இருக்கும் என ஸ்டாப் டிரம்ப் கூட்டணி தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியையும்... டிரம்ப்பினால் கட்டவிழ்த்து விடப்படும் இன வெறி தாக்குதல், ஏகாதிபத்திய சுரண்டல்கள் என அனைத்து மக்கள் விரோதச் செயல்களும் அமெ ரிக்காவிலும் உலகம் முழுவதிலுமுள்ள தீவிர வலதுசாரி கள் மற்றும் இனவெறியர்களுக்கு ஊக்கமளிக்கும். இத்தகைய சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் தீவிர வலதுசாரிகளின் இனவெறி பாசி சத்திற்கும் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராட தங்கள் பலத்தை கூட்டுக்கரங்களால் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி டிரம்ப் எடுக்கும் முடிவுகள் இந்த பூமி யில் உள்ள அனைவரின் வாழ்க்கையையும் ஏன் இன் னும் இந்த பூமியில் பிறக்காத எதிர்கால சந்ததியின ரின் வாழ்க்கையையும் கூட பாதிக்கும் தாக்கத்தை உருவாக்கும் என சர்வதேச பொது மன்னிப்புச் சபை யின் (அம்னிஸ்டி இன்டர் நேஷனல்) பொதுச் செய லாளர் ஆக்னஸ் காலமர்ட் எச்சரித்துள்ளார்.